கோவை, ஜூலை 6- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமியை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அரசாணை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அமைச்சர்களை மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய் யப்பட்டுள்ளனர். அந்தந்த மாவட்ட வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்து தல், பொதுமக்களுக்கு சென்ற டைய வேண்டிய நலத்திட்ட உதவி களை கண்காணித்தல், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று மற்றும் அவசர கால பணிகளை மேற்கொள்ள வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தற்போது கோவை மாவட்டத்திற்கு, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமியை, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நியமித்துள்ளார். முன்னதாக, வியாழனன்று கோவை மாவட்டம், வால்பாறை உள்ளிட்ட இடங்களில் மழையால் ஏற்பட்ட சேதம் குறித்து அமைச்சர் சு.முத்துச்சாமி நேரில் ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.