கோவை, ஜூன் 9- தமிழ்நாட்டில் மருத்துவ காலிப்ப ணியிடங்களுக்கு, இந்தாண்டு மருத் துவ பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவக்கல் லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில், கடந்த 2018 ஆம் ஆண்டு சேர்ந்து, மருத்துவ பட்டம் படிப்பு முடித்தவர்களுக்கு பட்டம ளிப்பு விழா கோவை அரசு மருத்து வக்கல்லூரி மைதானத்தில் நடை பெற்றது. இவ்விழாவில், மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பி ரமணியன் பங்கேற்று, மாணவ, மாண விகளுக்கு பட்டங்களை வழங்கி னார். அதன்படி, அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் பயின்ற 146 மருத்துவர்கள் மற்றும் இஎஸ்ஐ மருத் துவக்கல்லூரியில் பயின்ற 88 மருத் துவர்களுக்கு பட்டங்கள் வழங்கப் பட்டன. இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், மருத்துவத்துறையில் காலியாக உள்ள 2553 மருத்துவர் காலிப்பணியிடங்கள் நிரப்ப, ஏற்க னவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது. அதனால், நடப்பாண்டில் மருத் துவப் பட்டப்படிப்பு முடித்த மருத் துவர்களும் விண்ணப்பிக்கலாம். உலகிலேயே முதல் முறையாக தமிழ கத்தில் உள்ள அரசு மருத்துவமனை களில் தான், செயற்கை கருத்தரித் தல் மையம், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக செயல்பட்டு வருகிறது, என்றார். பொள்ளாச்சி பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப் பட்டுள்ள உள் நோயாளிகள் கட்டண பிரிவு புதிய கட்டிட திறப்பு விழா ஞாயி றன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் இந்நிகழ்வில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பி னர் கே.ஈஸ்வரசாமி, மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி, சார் ஆட்சியர் அ.கேத்தரின் சரண்யா, மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் ராஜசேகரன், நகர்மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.