ஈரோடு, ஜன. 30- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்கு ழுவின் சார்பில் மதவெறி எதிர்ப்பு கருத்தரங் கம் நடைபெற்றது. தேசப்பிதா படுகொலை செய்யப்பட்ட நாளில் மதவெறி எதிர்ப்பு கருத்தரங்கம் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் சார்பில் ஈரோட்டில் நடைபெற்றது. அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாது காப்போம், மதவெறியை மாய்ப்போம் என்ற தலைப்பில் மதவெறி எதிர்ப்பு கருத்தரங் கிற்கு மாவட்டத்தலைவர் கே.எஸ்.இஸா ரத்தலி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் என்.முஹம்மது ஹனீபா வரவேற்றார். காசிபாளையம் பேரூராட்சி யின் முன்னாள் தலைவர் கே.துரைராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மேனாள் தலைவர் க.ராஜ்குமார் ஆகியோர் முன்ன ணிலை வகித்தனர். மகாத்மா காந்தி ரத்த தான அமைப்பினை மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.ஹாத்திம்தாய் அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொது செயலாளர் ஆதவன் தீட்சண்யா, தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில உதவி தலைவர் ப.மாரிமுத்து ஆகி யோர் கருத்துரையாற்றினர். முடிவில், மாவட்ட உதவி தலைவர் ஏ.அப்துல் பாஷித் நன்றி கூறினார்.