districts

img

நீட் தேர்வு எதிர்ப்புக் கருத்தரங்கம்

கோவை, ஜூலை 16- ஒன்றிய மோடி அரசு கொண்டு வந் துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களி னால் ஏற்படும் ஆபத்து மற்றும் நீட்  தேர்வு எதிர்ப்புக் கருத்தரங்கம் கோவை யில் செவ்வாயன்று நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு சார்பில் மூன்று  குற்றவியல் சட்டங்கள் மற்றும் நீட் தேர்வு எதிர்ப்புக் கருத்தரங்கம் காந்தி புரம் கமலம் துரைசாமி திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு, மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டக்குழு உறுப்பி னர் ஆர்.கோபால் சங்கர் தலைமை ஏற் றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  கே.எஸ்.கனகராஜ் வரவேற்றார் பேசி னார். இக்கருத்தரங்கில், மூத்த வழக்க றிஞர் ப.பா.மோகன் மற்றும் கல்வியா ளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மக்கள்  நல்வாழ்விற்கான மருத்துவர் அரங் கம் டாக்டர் எம்.நேரு பாபு ஆகியோர் கருத்துரையாற்றினர். 

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத் மநாபன் மற்றும் செயற்குழு உறுப்பி னர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.