கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எல்.இ.டி. விளக்கு கொள்முதலில் 500 கோடி ஊழல் புகார் என தகவல்களின்படி முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட 10 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு குழு சோதனை செய்து வருகின்றனர்.
இதேபோல் வடவள்ளி பகுதியிலுள்ள மாநகராட்சி ஒப்பந்ததாரரும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமானவருமான சந்திரசேகர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே இரண்டுமுறை நடந்த சோதனை நடத்தப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தப்படுவதையறிந்த அதிமுகவினர் காலை முதலே எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவியத்துவங்கினர்.