சேலம் உடையாப்பட்டி பைபாஸ் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள அரசு மதுக்கடை உச்ச நீதி மன்றத்தின் வழி காட்டுதலை மீறி செயல்பட்டு வருகிறது. இதைக் கண் டித்து வாலிபர் சங்க சேலம் கிழக்கு மாநகரம் சார்பில் மதுக்கடையே தன்னை அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டுகோள் விடுப்பது போல் வைக்கப்பட்டுள்ள தட்டி அனைத்து தரப்பினரையும் வெகு வாக கவர்ந்துள்ளது.
சேலம், டிச.13- சேலம் மெய்யனூர் பகுதி யில் புதிதாக மதுக்கடை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி மேற் கொள்வதை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர், மெய்யனூர் - இட்டேரி சாலையில் புதியதாக மதுக்கடை அமைக்க டாஸ்மாக் நிர்வாகத்தால் அனைத்து ஏற்பாடு களும் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்நிலையில், மதுக் கடை அமையும் இடத்திற்கு அருகே மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை, மின்வாரிய அலு வலகம், மயானம், மருத்துவ மனை, சிறு, குறு தொழில் நிறுவ னங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளது. ஏற்கனவே ஊருக்குள் நுழையும் போதே ஒரு மதுக் கடை இருக்கும் நிலையில், ஊருக் குள்ளேயே மற்றொரு மதுக்கடை எதற்கு? என்றும், இந்த மதுக்கடை அமைந்தால் அப்பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விகுறியாகும் நிலை ஏற்படும். மேலும், மயானத்திற்கு வரு வோர், மின்வாரிய அலுவலகத் திற்கு வருவோர், மருத்துவம னைக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் அனைவருக்கும் பெரும் இடையூறு ஏற்படும்.
எனவே, மேற்கண்ட இடத்தில் புதிய மதுக்கடையை எக்காரணம் கொண்டும் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த போராட்டத்திற்கு வாலி பர் சங்க வடக்கு மாநகர செயலா ளர் ஆர்.குருபிரசன்னா தலைமை வகித்தார். இதில், சிபிஎம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன் குமார், மாநகர குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.வெங்க டேஷ், மாநகர தலைவர் பி.சதீஷ் குமார், நிர்வாகிகள் மூர்த்தி, புரு ஷோத்தமன், ஆர்.வி.கதிர்வேல், எஸ்.சசிகுமார், கே.நாகராஜ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து தகவலறிந்து சம் பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதி காரி, காவல் உதவி ஆணையர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடு பட்டோரிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். இதில், புதிய மதுக் கடை அமைக்கப்படாது என அதி காரிகள் உறுதியளித்தனர். மேலும், அதேபகுதியில் ஏற்கனவே உள்ள மதுக்கடையை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வ தாகவும் உறுதியளித்தனர்.