districts

img

“இரட்டை தலைமையின் கழிவறை” அதிமுக ஆட்சியின் ஊழலுக்கு மற்றுறொரு சாட்சி

கோவை, செப்.7- ஒரே அறையில் இருவர் செல் லக்கூடிய புதுமை கழிவறையை இரட்டை தலைமை அதிமுக ஆட்சி யில் கட்டப்பட்டது தற்போது அம்ப லத்திற்கு வந்துள்ளது.  கோவை மாநகராட்சி, 66 ஆவது வார்டு புலியகுளம் அம்மன் குளம் பகுதி உள்ளது. நூற்றுக்கணக் கான குடியிருப்புகள் உள்ள இந்த பகுதியில் அதிகம் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் உழைப் பாளி மக்கள் வாழுகிற பகுதியா கும். வீடுகளுக்கு தனிக்கழிப் பறை அமைக்கும் வசதிகள் இல் லாததால் பொதுக்கழிப்பிடத் தையே பயன்படுத்துகின்றனர். இந் நிலையில், அம்மன்குளம் ராஜீவ் காந்தி நகரில் கோவை மாநகராட்சி பராமரிக்கும் பொதுக்கழிப்பிடம் உள்ளது. ஆண்கள், பெண்கள் என  தனித்தனியான கழிவறைகள் உள் ளது. கடந்த அதிமுகவின் ஆட்சி யில் கட்டப்பட்ட இந்த பொதுக் கழிப்பிடத்தின் கழிப்பறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப் பறைகள் இரண்டிலும் ஒரே  கழி வறையினை இரண்டு பேர் அருக ருகே அமர்ந்து  பயன்படுத்தும் வகை யில் கட்டப்பட்டுள்ளது.  இந்த கழிவறைக்கு கதவுகளும் இல்லாததால் அந்த கழிவறை பயன் படுத்த முடியாத நிலையில் இருக் கின்றது.

இரண்டு பேர் அருகருகே அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள தால் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.  அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது  என்பதால், இரட்டை தலைமை பிரச் சனை கழிவறை கட்டுவது வரை வந்துவிட்டது என்றும், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணியின் ஊழலுக்கு மற்றுமொறு சாட்சி இரட்டை கழிவறை எனவும் சமூக வலைத்தளங்களில் நக்க லடித்து வருகின்றனர். வீட்டுக்கு வீடு கழிவறை, தனிக்கழிப்பறை என்கிற அரசின் வாய்ச்சவடால்கள் பொதுக்கழிப்பிடத்திற்கு பொருந் தாதே என்றும் கிண்டலடித்து வரு கின்றனர்.  இதுகுறித்து மாநராட்சி தரப் பில் கூறுகையில், இந்த கழிவறை தற்போது பயன்பாட்டில் இல்லை. விரைவில் சீரமைக்கும் பணி நடை பெற உள்ளது. இதனை யாரும் பயன் படுத்துவதில்லை, என்றனர்.

;