அங்கன்வாடி, தேநீர் கடையை சேதப்படுத்திய கரடிகள்
உதகை, பிப்.27- நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் கடந்த சில நாட்க ளாக கரடி நடமாட்டம் அதிகரித்து வந்தது. இரவு நேரங்களில் உணவு தேடி குடியிருப்பு மற்றும் பஜார் பகுதிகளில் உலா வருவதும், பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று மறை வதுமாக இருந்தது. ஏற்கனவே மஞ்சூர், கொட்டரகண்டி, கண்டிமட்டம் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்த கரடி, ஒரு கட்டத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பஜார் பகுதியிலும் சுற்றித் திரிந்தது. அங்குள்ள தேநீர் கடைகள், அரசுப்பள்ளி, கோவி லில் புகுந்து பொருட்களை சூறையாடி வந்தது. ஆகவே, கர டியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப் பினர் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறை யினர் கூண்டு வைத்து கரடியை பிடித்து தொலைதூரத்தில் உள்ள பங்கி தபால் வனப்பகுதியில் விடுவித்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்திருந்தனர். இந்நிலையில், மீண்டும் கரடியின் நடமாட்டம் தொடங்கியுள் ளது. மஞ்சூர் அருகே உள்ள ஓணிகண்டி பகுதியில் உலா வந்த கரடி, கனகன் என்பவரது தேநீர் கடையின் பக்கவாட்டு தகர தடுப்பை உடைத்து உள்ளே புகுந்து, உணவு பண்டங்களை சாப்பிட்டுவிட்டு, உள்ளே இருந்த பொருட்களை சூறையாடி விட்டு சென்றது. அதன்பின்னர், நள்ளிரவில் மஞ்சூர் பஜார் பகுதிக்கு சென்ற கரடி, நீண்ட நேரம் கடைவீதியில் உலா வந் தது. அப்போது பஜார் பகுதியில் இருந்த தெருநாய்கள் விரட்டி யதால் மேல் பஜார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியின் நுழைவு வாயிலை தாண்டி உள்ளே குதித்துள் ளது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இருந்த அங்கன்வாடி மையத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, அங்கு மாண வர்களுக்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகளை குடித்த கரடி, பொருட்களையும் சூறையாடியது.
சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
தருமபுரி, பிப்.27- வே.முத்தம்பட்டியில் இருந்து தருமபுரி வரை உள்ள சேத மடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வா கத்தை அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வே. முத்தம்பட்டியில் இருந்து தருமபுரி மெயின் ரோடு பாகல அள்ளி கிராமம் வரை செல்லும் தார்ச்சாலை, குண்டும் குழியு மாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில்தான் முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது தினசரி ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை யில் வரும் இருசக்கர வாகனங்கள் அவ்வப்போது பழுத டைந்து நடுவழியில் நின்று விடுகிறது. எனவே, மாவட்ட நிர்வா கம் இந்த சாலையை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனைமலை வனப்பகுதியில் காட்டுத்தீ
கோவை, பிப்.27- கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற் குட்பட்ட வால்பாறை வனச்சரகத்தில் அக்காமலை புல்மேடு வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி தேசிய பூங்காவாக விளங்குகிறது. இந்த வனப்பகுதி 5 ஆயிரம் ஹெக்டர் பரப் பளவை கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரத்து 513 மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்கு தணக்குமலை, அக்கா மலை, புதுமலை, கல்லார் மலை, ஊசிமலை ஆகிய வனப் பகுதிகள் உள்ளன. அக்காமலை புல்மேடு வனப்பகுதியை கேரளா மற்றும் தமிழ்நாடு வனத்துறையினர் பராமரித்து வரு கின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சி பூ மலரும் வனப்பகுதியாகவும் உள்ளது. தற்போது பிப்ரவரி மாதத் திலேயே வால்பாறை பகுதியில் கடும் வெயில் வாட்டி வருவ தால், வனப்பகுதிகள் வறண்ட நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில், உடுமலை வனச்சரக பகுதியை ஒட்டிய அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. தொடர்ந்து வால்பாறை வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதிக்கும் தீ பரவியது. காய்ந்து கிடக்கும் செடி, கொடி, புற்கள், மரங்களும் தீ பரவி பற்றி எரிய தொடங்கி யது. 2 ஆவது நாளாக ஞாயிறன்று வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக் குநர் உத்தரவின் பேரில், வால்பாறை வனச்சரக வனத்துறை யினர் அக்காமலை புல்மேடு பகுதிக்கு சென்று காட்டுத்தீ பரவு வதை தடுக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், கடுமை யான வெயில் காரணமாகவும், பலத்த காற்று வீசியதாலும் தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது. காட்டுத்தீ காரணமாக சின்னக்கல்லார், சிங்கோனா, முடீஸ், பன்னிமேடு, கேரள எல்லைப் பகுதி வரை புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. வனத்துறையினர் இரவு, பகலாக காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சாலை விபத்து
ஈரோடு, பிப்.27- கோவை, சூலூரை சேர்ந் தவர் வடிவேல் (38). இவர் தனது குடும்பத்தினர் 14 பேரு டன் கர்நாடகாவிற்கு சென்ற னர். இதையடுத்து வீடு திரும் புகையில், திம்பம் மலைப் பாதையின் 3 ஆவது வளை வில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து விபத்துக் குள்ளானது. இதில், சிறுவன் உட்பட 6 பேர் காயமடைந் தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஊருக்குள் ஊடுருவும் வனவிலங்குகள்
கோவை, பிப்.27- ஊருக்குள் ஊடுருவும் வனவிலங்குகளிடமிருந்து தங்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லூர் வயல் ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர். கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த நல்லூர் வயல், மரக்காட்டுத்தோட்டம் ஊர் பொதுமக்கள், விவசாயிகள் வனவிலங்குகளிடமிருந்து தங்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் பாதுகாப்பு வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில், இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், பிரதானமாக விவசாயம் செய்து வருவதாகவும், கடந்த இரண்டு மாத காலங்களாக அடிக்கடி யானைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் ஊடுருவி பயிர்கள் சேதப்படுத்தப்படுத்துகிறது. மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. வனத்துறையினரிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், தனது நிலத்தில் சுமார் 6 லட்சத்திற்கு வாழை மற்றும் பாக்கு விவசாயம் செய்து வந்த நிலையில், வனவிலங்குகள் தனது விவசாய நிலத்தை சேதப்படுத்தி விட்டது. இது குறித்து, கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்த நிலையில், வனத்துறையினரை தொடர்பு கொண்டு வெறும் 83 ஆயிரம் மட்டுமே இழப்பீடு தொகை வழங்கியதாக வேதனை தெரிவித்தார். மேலும் தான் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள பல்வேறு விவசாயிகளின் நிலையும் இதுபோன்றுதான் உள்ளது, என்றார்.
பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் படுகாயம்
உதகை, பிப்.27- உதகையில், பேருந்து கவிழ்ந்து விபத் துக்குள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந் தனர். நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த காரப்பிள்ளு கிராமத்தில் இருந்து தொரை யட்டி கிராமத்திற்கு திங்களன்று காலை தனி யார் மினி பேருந்து சென்று கொண்டிருந் தது. இதில், ஓட்டுநர், நடத்துநர் உள்பட 30 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் தொரையட்டி கிராமத்திற்கு துக்கம் விசாரித்து ஆறுதல் கூறுவதற்காக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், காவியலோரை பகுதி யில் சென்றபோது எதிரில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. குறுகலான சாலை என்ப தால் பேருந்தை சாலையோரம் நிறுத்துவ தற்காக ஓட்டுநர் முயற்சித்துள்ளார். அப் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இறங்கி, அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த கண்ணாடிகள் உடைந்து 10க்கும் மேற்பட்டவர்களுக்கு பெரும் காயம் ஏற்பட் டது. பயணிகளின் கதறல் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள், பயணிகளை மீட்டனர். மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் உதகை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, தேனாடு கம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். முன்னதாக பேருந்து கவிழ்ந்தபோது மரம் மற்றும் அங்கிருந்த பாறை மீது மோதியதால் பேருந்து அங்கேயே நின்று விட்டது. இல்லாவிட்டால் அருகில் இருந்த 50 அடி பள்ளத்திற்குள் கவிழ்ந்து பெரும் அசம் பாவிதம் ஏற்பட்டிருக்கலாம் என்று போலீ சார் தெரிவித்தனர்.
பருத்தி ஏலம்
சேலம், பிப்.27- கொங்கணாபுரம் கூட்டு றவு வேளாண் விற்பனை சங் கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு 10 ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில் பிடி ரகப் பருத்தி குவிண்டால் ரூ.7,400 முதல் ரூ.8,309 வரையிலும், டிசிஎச் ரகப்பருத்தி குவிண் டால் ரூ.7,900 முதல் ரூ.8,799 வரை விற்பனையானது. கொட்டு ரக பருத்தி குவிண் டால் ரூ.4,800 முதல் ரூ.5,950 வரை விற்பனையானது. மொத் தம் ரூ.2.85 கோடிக்கு வர்த்த கம் நடைபெற்றது.
வீட்டு வரி வசூலில் கெடுபிடி: நகராட்சி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு
திருப்பூர், பிப்.27- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சியில், வீட்டு வரி செலுத்துவது தொடர்பாக, கந்து வட்டி வசூல் தொனியில் பொதுமக்களிடம் அடாவடி காட்டி வருவதாக வெள்ளகோ வில் இரண்டாம் நிலை நகராட்சி நிர்வாகத்தின் மீது குற்றச் சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளகோவில் இரண்டாம் நிலை நகராட்சியில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊழியர்கள் வீடு, வீடாக வரி கேட்பு நோட்டீஸ் கொடுத்து உடனடியாக வரி செலுத்தும் படி கேட்டு வருகின்றனர். வழக்கமாக மார்ச் மாதம் காலக்கெடு முடியும் நிலையில் வீட்டு வரி செலுத்த அறிவிப்பு செய்யப்ப டும். ஆனால் இப்போது உரிய காலக்கெடுவிற்கு முன்பாகவே வீடு, வீடாக சென்று கெடுபிடியாக, வீட்டுவரி செலுத்த நிர்பந் திப்பதாகவும், பணத்தை வற்புறுத்தி பெறுவதாகவும், அதே சமயம் வரி செலுத்தியதற்கான ரசீதை மறுநாள் தருகிறோம் என்று வாங்கிச் செல்வதாகவும் பொது மக்கள் தரப்பில் கூறப்ப டுகிறது. கெடுபிடி வசூல் பிரச்சனை குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டனர்.
திருப்பூருக்கு ரூ.240 கோடி ஒதுக்க ஏஐடியூசி வலியுறுத்தல்
அவிநாசி, பிப்.27- திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து முடிக்க எம்.பி,. கே.சுப்பராயன் கோரியபடி ரூ.240 கோடி ஒதுக்க பனியன் பேக்டரி லேபர் யூனியன் (ஏஐடியூசி) கோரிக்கை விடுத்துள்ளது. ஏஐடியூசி பெருமாநல்லூர் மற்றும் நியூ திருப்பூர் பகுதி மகாசபை கூட்டம் பெருமாநல்லூர் தனியார் மண்டபத்தில் ஞா யிறன்று நடைபெற்றது. பொறுப்பாளர் பூபதி, நஞ்சப் பன் தலைமை வகித்தனர். இதில், திருப்பூரில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகள் முழுமை யாக செய்து முடிக்க ரூ.240 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும். திருப்பூரின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக சமீப காலமாக தொழிலாளர்களுக்கு இடையில் மோதல் உருவாக்கப்படுகிறது. 1979 புலம்பெயர் சட்டத்தின் படி தொழிலாளர்களை முழுமையாக பதிவு செய்து அடையாள அட்டை வழங்கி, அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைதொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி திட்டம்
திருப்பூர், பிப்.27 – திருப்பூர் மாவட்டத்தில் மார்ச் 1 முதல் மார்ச் 21 வரை அனைத்து கால்நடைகளுக் கும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட வுள்ளது. கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கி னால் விவசாயிகளுக்கு மிகப்பெரும் பொரு ளாதார மற்றும் உற்பத்தி இழப்பு ஏற்படும். கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும், சினை பிடிப்பு தடைபடும். எருதுகளின் வேலைத்திறன் குறையும். இளங்கன்றுக ளின் இறப்பு சதவீதம் உயரும். அதனால் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கா மல் இருக்க, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை, அனைத்து கால் நடைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. நடப்பாண்டு 2023 மார்ச் 1 முதல் மார்ச் 21 தேதி வரை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிரா மப்புறங்கள், குக்கிராமங்கள் மற்றும் நகர்பு றங்களில் உள்ள அனைத்து கால்நடைகளுக் கும் இந்த தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்போரை மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:43.23/60அடி நீர்வரத்து:801கன அடி
வெளியேற்றம்:1138கனஅடி
அமராவதி அணை நீர்மட்டம்:55.61/90அடி
நீர்வரத்து:9கனஅடி
வெளியேற்றம்:654கனஅடி
9 மரங்களை வெட்டி சாய்த்த அடையாளம் தெரியாத நபர்கள்
அவிநாசி, பிப்.27- திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட 25 ஆவது வார்டு மயான பகுதி யில் அடையாளம் தெரியாத நபர்கள் 9 மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட 25 ஆவது வார்டில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் பொது மயா னம் சுமார் 50 சென்ட் அளவில் அமைந் துள்ளது. இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் சைலோ காரில் மயா னத்திற்குள் உள்ளே சென்று, மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளனர். இத்தகவலை அறிந்த 25 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் பாரதி மயானத்திற்கு சென்று பார்க்கும் போது 9 மரங்களை வெட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அருகில் இருந்த பொது மக்களிடம் கேட்டபோது கார் நம்பரை தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நகர மன்ற உறுப்பினர் பாரதி காவல் துறை அதிகாரிகளுக்கும், கிராம நிர் வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித் துள்ளார். இதனையடுத்து கிராம நிர் வாக அலுவலர் ஆய்வு செய்து வட்டாட் சியருக்கு புகார் தெரிவிப்பதாக தெரி வித்துள்ளார். இது குறித்து நகர மன்ற உறுப்பி னர் பாரதி தெரிவிக்கையில் , சுற்றுச்சூழ லையும், இயற்கையும், மழை வளம் பெருக்க மயான பகுதியில் பல வருடங் களாக பாதுகாக்கப்பட்ட மரங்கள் தற்பொழுது அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிச் சென்றுள்ளனர். யாராக இருந்தாலும் துறை ரீதியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.
மார்ச் 1 முதல் 10 ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
திருப்பூர், பிப்.27- திருப்பூர் மாவட்டத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத் தப்பட உள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்தி றனாளிகளுக்கு முன்னுரிமை வழங் கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சி யாக, மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை திருப்பூர் மாவட்டத் தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில், மாற்றுத்திறனாளிக ளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள் ளது. இம்முகாமினை பயன்படுத்தி, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வசிக்கும் பகுதியை சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி நீல நிற வேலை அட்டையினை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காங்கேயம் அருகே தொடரும் விபத்து அரசு பேருந்து - வேன் மோதல்: ஒருவர் பலி
திருப்பூர், பிப்.27- திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே திங்களன்று அரசுப் பேருந்தும், சரக்கு வேனும் மோதிக் கொண்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 15 பேர் காயமடைந்தனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சா லையில், காங்கேயம் அடுத்து வீராணம் பாளையம் என்ற இடத்தில் திங்களன்று இந்த விபத்து நடைபெற்றது. கரூரில் இருந்து கோவை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, வீராணம்பாளையம் பகுதி யில் உள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் வேலை முடித்து சரக்கு வேனை ஓட்டுநர் வெளியே எடுத்திருக்கிறார். திடீரென சாலையில் வேன் புகுந்ததைத் தொடர்ந்து, எதிர்பாராத விதமாக இந்த சரக்கு வேனும், எதிரே வந்து கொண்டி ருந்த அரசுப் பேருந்தும் மோதிக் கொண் டன. அரசுப் பேருந்தின் பின்னால் வந்த பொலிரோ வாகனமும் அந்த பேருந்தின் பின்புறமாக மோதி சேதமடைந்தது. இதில் நிலை தடுமாறிய அரசு பேருந்து அருகில் இருந்த மரத்தில் மோதி நின் றது. இதில் அரசு பேருந்தின் ஓட்டுநர், அதில் பயணம் செய்த பத்துக்கு மேற் பட்ட பயணிகள் மற்றும் சரக்கு வேனின் ஓட்டுநர் விக்னேஷ் (வயது 45) ஆகி யோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக காங்கேயம் அரசு மருத் துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்த சரக்கு வேனின் ஓட்டுநர் விக்னேஷ் உட னடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். எனினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த பேருந்து பயணிகள் காங் கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை விபத்தின் காரணமாக கரூர் காங் கேயம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஞாயிறன்று இதேபோல் காங்கே யம் வட்டம் முத்தூர் அருகே சரக்கு வேனும், லாரியும் மோதிக் கொண்ட விபத்து நடந்தது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே கடந்த நான்கைந்து ஆண்டு காலத்தில், திருப் பூர் மாவட்டத்திலேயே காங்கேயம் வட் டாரத்தில் தான் அதிக சாலை விபத்து கள் நடைபெற்றுள்ளன. எனவே தொட ரும் விபத்துகளை தவிர்க்க மாவட்ட நிர் வாகமும், போக்குவரத்துத்துறையும் உரிய ஆய்வு செய்து தேவையான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு உயிரிழப்பு விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
பேன்சி ஸ்டோரில் மது விற்பனை ஜோர் பொதுமக்கள் எதிர்ப்பு: போலீஸ் தலையீடு
பள்ளிபாளையம், பிப்.27- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள குட்டை முக்கு என்ற பகுதி அருகே, ஒரு பேன்சி ஸ்டோர் கடை யில் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய் யப்படுவதாக, பள்ளிபாளையம் போலீசாருக்கு ஞாயிறன்று தகவல் கிடைத்தது. இதனையடுத்து பள்ளிபாளையம் எஸ்ஐ அவ்வழியே செந்தில்குமார் ரோந்து சென்றபோது, அந்த கடை யினுள் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்பொழுது ஐந்து மது பாட்டில்கள் பதுக்கி வைத்து, வாடிக்கையாளருக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந் தது. இதன்பின் மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீ சார், கோயில் மணி வயது 60 என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இதுபோல பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட பல்வேறு இடங்கள், விசைத்தறி தொழிற்கூடங்கள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதி களில், அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை நடை பெற்று வருவதாகவும், இதுகுறித்து பள்ளிபாளையம் போலீ சார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர் வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
சூதாட்டம்: 9 பேர் கைது
தருமபுரி, பிப்.27- காரிமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 9 பேரை கைது செய்த போலீசார், அவரிகளிடமிருந்து பணம் மற்றும் 9 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கரகப்பட்டி ஏரிக்கரையில் பணம் வைத்து பலர் சூதாடுவதாக போலீசா ருக்கு கிடைத்த தகவலரின் பேரில், போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று ஏரிக்கரையில் சூதாடிக் கொண்டிருந்த கும் பலை பிடித்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணை யில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் (30), ராஜ வேலு (41), பழனிசாமி (38),ரமேஷ் (38), இளங்கோ (58) மற் றும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பாக்யராஜ் (37), ஜெகதீ சன் (53), சின்னசாமி (45), முனியப்பன் (33) என்பது தெரிய வந்தது. இவர்கள் 9 பேரை கைது செய்த போலீசார் அவர்களிட மிருந்து ரூ.38,550 மற்றும் 9 இருசக்கர வாகனங்களை பறி முதல் செய்தனர்.
காட்டு யானை தாக்கி முதியவர் பலி
உதகை, பிப்.27- நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகு திகளில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவிய பனிப் பொழிவு மற்றும் பகல் நேரங்களில் நிலவி வரும் வெயிலின் காரணமாக செடி கொடிகள் கருகி வனப்பகுதிகள் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், வனப்பகுதியில் தற் போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வனப் பகுதியில் உள்ள வனவிலங்குகள் குடியிருப்புகள் சாலை யோரங்கள் மற்றும் விளை நிலங்களில் உணவு மற்றும் தண் ணீர் தேடி உலா வருகிறது. உலா வரும் சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதேபோல், திங்களன்று அல்லூர் வயல் பகுதியில் வசித்து வந்த கருப்பன் என்ற முதியவர் சொந்த தேவைக்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, வனப்பகு தியில் மறைந்திருந்த காட்டு யானை இவரை தாக்கியுள்ளது. காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சம்பவம் குறித்து அப்பகுதி மக் கள் கூடலூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ள னர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை யினர் காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டி, உயிரிழந்த கருப்பனின் உடலை மீட்டனர். இதனைத் தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு மாதத்தில் கூடலூர் பகுதியில் காட்டு யானை தாக்கி மூன்றாவது நபர் உயிரிழந்தது குறிப்பிடத் தக்கது.