districts

img

பட்டாடைகளும் - பட்டு புழு வளர்ப்பு விவசாயமும்...

“உருவத்தை பார்த்து எடை போடதே” என்ற பழமொழிக்கு சிறந்த  எடுத்துக்காட்டாக உள்ளன பட்டு  புழுக்கள். உருவம் சிறியதாக இருப் பினும், இதன் மூலம் உற்பத்தியாகும்  பட்டு நூலின் விலையானது உயர்ந்து  காணப்படும். சுப நிகழ்ச்சிகள் என் றால், நம் ஒவ்வொருவருக்கும் முதலில் நினைவில் வருவது பட்டா டைகள் தான். தமிழ்நாட்டில் பல விவ சாயிகளின் குடும்பங்கள் பட்டு உற் பத்தியை வாழ்வாதாரமாக கொண் டுள்ளனர். தருமபுரி, கோவை, உடுமலை, தேனி, சேலம், ராசிபுரம் உட்பட  20க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு அரசின் பட்டு வளர்ச்சித் துறையின் கீழ், பட்டு அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயி கள் தாங்கள் உற்பத்தி செய்யும்  பட்டுக்கூடுகளை இந்த சந்தைகளில்,  நல்ல விலைக்கு விற்பனை செய்து  லாபம் ஈட்டி வருகின்றனர். கோவையில் பட்டு வளர்ச்சித் துறை அலுவலகம் பாலசுந்தரம் சாலையில் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்திலேயே பட்டுக் கூடு அங்காடியும் செயல்பட்டு வரு கிறது. இங்கு நாளொன்றுக்கு 1  முதல் 2 டன் பட்டுக்கூடுகள் விற்பனை யாகி வருகிறது. இதன் மூலமாக கோவை, ஈரோடு, திருப்பூர், திண் டுக்கல் மற்றும் தேனி உட்பட பல் வேறு பகுதிகளைச் சேர்ந்த விவ சாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதுகுறித்து பட்டு வளர்ச்சித் துறையின் கோவை மாவட்ட உதவி இயக்குநர் திலகவதி கூறியதாவது, கோவை மாவட்டத்தில் அன்னூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை, கிணத்துக்கடவு உட்பட பல்வேறு இடங்களில் பட்டு விவசாயம் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மாவட் டத்தில் மொத்தம் 2,379 ஏக்கர் பரப்ப ளவில் 1050 விவசாயிகள் பட்டு விவ சாயம் மேற்கொள்கின்றனர். பட்டு  விவசாயமானது குறுகிய காலத்தி லேயே விவசாயிகளுக்கு லாபத்தை ஈட்டித் தருகிறது. 

பட்டு விவசாயிகள் புதிதாக மல்பெரி நாற்றுகளை நடவு செய்யும் போது, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10,500 மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு 12.35 ஏக்கர் வரை யிலும் நடவு மானியம் வழங்கப்படு கிறது. புழு வளர்பிற்கு 1500 சதுர அடிக்கு  ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இவை  தவிர பட்டு விவசாயத்திற்கு தேவை யான தளவாடங்கள் ஆண்டு தோறும் இலவசமாக விவசாயி களுக்கு அரசு வழங்கி வருகிறது.  இந்த விலையில்லா தளவாடங் களை பெறுவதற்கு விவசாயிகள்  மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை அலுவ லகத்தில் விண்ணப்பிக்கலாம். பட்டுக்கூடு அங்காடிகள் மூலமாக விவசாயிகள் பட்டுக்கூடுகளை  நூற் பாளர்களுக்கு விற்பனை செய் கின்றனர். இதன் மூலமாக அரசுக்கு  லெவி வருவாய் கிடைக்கிறது. கடந் தாண்டு மட்டும் 240 டன் பட்டுக் கூடுகள் கோவை பட்டுக்கூடு அங் காடி மூலமாக விற்பனை செய்யப் பட்டுள்ளன. இதன் மூலமாக அரசுக்கு  ரூ.19 லட்சத்து 85 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் விவ சாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு  குறித்து இலவச பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. ஒசூரில் இந்த சிறப்பு  வகுப்புகள் நடத்தப்படுகினறன. இந்த பயிற்சிக்கு கோவை விவசாயி கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வரு கின்றனர். இந்த பயிற்சி மையத்தில் மண், தாவர போன்ற பலதுறை ஆராய்ச்சியாளர்கள், 5 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்து கின்றனர். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 5 நாட்களுக்கு இலவச விடுதி, உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளையும் அரசு  வழங்கி வருகிறது. நடப்பாண்டில் பட்டு விவசாயம் செய்யும் பரப்பளவு கோவையில் அதிகரித்துள்ளது. விவசாயிகள் பட்டு விவசாயம் மேற் கொண்டு அதிக லாபத்தை ஈட்ட  முடியும். இது தொடர்பான ஆலோச னைகளுக்கு பாலசுந்தரம் சாலை யில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள லாம், என்றார். பட்டு விவசாயம் என்பது காலந் தொட்டு மேற்கொள்ளப்பட்டு வருவ தாகும். அதாவது, பண்டைய காலத்தில் குறு நில மன்னர்களை, பெரும் அரசர்களை கவர்வதற்காக பெரும் செல்வந்தர்கள் பட்டாடை களை பரிசாக வழங்கியுள்ளனர். தற் போதும், தமிழ்நாட்டில் பட்டு என்றால்  காஞ்சிபுரம், ஆரணி, திருப்புவனம் போன்ற பட்டாடைகள் பிரசித்தி பெற்றவைகளாகும். அந்த அள விற்கு பட்டு பயன்பாட்டிலிருந் தாலும், அதன் உற்பத்தி (விவசாயம்)  குறித்து மக்களுக்கு போதிய அளவில் இல்லை என்பதே நிதர்சன மான உண்மையாகும். பட்டுப்புழு  வளர்ப்பு குறித்து விவசாயிகளி டையே பெயரளவில் மட்டும் ஆர்வம்  உள்ளது. 

அதேசமயம், தமிழ்நாட்டின் குறிப்பிடத்தகுந்த பல பகுதிகளில் தற்போதும் கூட குடும்பம், குடும்ப மாக பட்டுப்புழு விவசாயம் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. பணப் பயிர்களான தேயிலை, கரும்பு  ஆகியவை போன்றே, பட்டுக்கூடு  விவசாயமும் லாபம் தரக்கூடிய ஒன் றாகும். அதனை விவசாயிகளி டையே கொண்டு சேர்க்க, அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை கிரா மங்கள் தோறும் நடத்த வேண்டும். அவ்வாறு செய்தால், பட்டுக்கூடு உற்பத்தி அதிகரித்து, விற்பனையும் அதிகரிக்கும். விற்பனை அதிகரித் தால், ஏல அங்காடி மூலம் அரசுக்கும்  வருவாய் அதிகரிக்கும். தொழில்நுட்பத்தால் மட்டுமே முதலீட்டை ஈட்ட முடியும் என்ப தில்லை. விவசாயத்திலும் முத லீட்டை பெற முடியும். ஆனால், அதற்கு தகுந்த ஆலோசனை பெற்று  தொடங்கினால், விவசாயத்திலும் பயன் பெறலாம் என்பதற்கு பட்டுக் கூடு விவசாயம் ஓர் சான்றாகும்.                        

                         -மு.சுவேதா.