கோவை, ஜூலை 9- டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், வங்கி தேர்வுக்கு பயிற்சி வகுப்பு ஞாயிறன்று காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்க அலுவலகமான சரோஜ் முகர்ஜி நிலையத்தில் துவங்கி உள்ளது. காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கம், வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகி யவை இணைந்து, டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தை நடத்தி வருகின்றனர். இங்கு, அரசு பணிகளுக்கான தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின் றனர். இந்த பயிற்சி மையத்தில், கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கான மாண வர்கள் படித்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வங்கி மற்றும் அரசு பணிகளில் இணைந்துள்ளனர். இந்நிலையில், வங்கி தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கள் தற்போது துவங் கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்விற்கு, காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கத்தின் தென் மண்டல இணைச் செயலாளர் எஸ்.சுரேஷ் தலைமை ஏற்றார். தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞரு மான எஸ்.ஆறுச்சாமி பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். வங்கி ஊழியர் கள் சங்க செயலாளர் ஆர்.மகேஸ் வரன் மற்றும் காப்பீட்டு கழக ஊழியர் கள் சங்கத்தின் மண்டல செயலாளர் துளசிதரன், பயிற்சி மையத்தின் ஒருங்கி ணைப்பாளர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், பயிற்சி மைய ஆசிரியர் எஸ்.முத்துராம லிங்கம், வங்கி ஊழியர் டி.சதீஷ்குமார் ஆகியோர் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.