districts

img

நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஒதுக்கீடு

சேலம், செப்.9- நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் 1.5 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு, ஒரு குடும்பத்திற்கு  2 செண்ட் வீதம் 44 குடும்பங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கப் பட்டுள்ளது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் நகராட்சி, 1 ஆவது வார் டுக்குட்பட்ட கசுவரெட்டிபட்டி ஏரி பகுதியில் நரிக்குறவர்கள் இனத்தை சேர்ந்த 54 குடும்பங்கள் வசித்து வந்தனர். தற்போது காவிரி உபரிநீரை 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தின் கீழ் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் ஏரி தனது முழு கொள்ள ளவான 156 ஏக்கர் முழுவதும் நிரம்பியது. ஏரி நிரம்பியதால் உபரிநீர் நரிக்குறவர்களின் குடியிருப்பு பகுதிகளை முழு வதும் சூழ்ந்தது. இதனால் நரிக்குறவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.  தற்போது ஆரூர்பட்டி ஊராட்சி, வெள்ளக் கல்பட்டி பகுதி யில் அவர்களை நிரந்தரமாக குடியமர்த்த ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளது. இதற்காக அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 1.5 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு ஒரு குடும் பத்திற்கு 2 செண்ட் வீதம் 44 குடும்பங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண் டார். மேலும், நரிக்குறவர்யின மக்களின்  கோரிக்கையேற்று அப்பகுதியில் குழந்தைகள் பயில அங்கன்வாடி மையம், குடி யிருப்பு பகுதிக்கு 25 அடி அகல கான்கிரீட் சாலை, குடிநீர் தொட்டி அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக ஆட்சியரின் இந்த ஆய்வின்போது ஓமலூர் வட்டாட்சியர் வள்ள முனியப்பன், வருவாய் ஆய்வாளர் முரு கேசன், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, தாரமங்க லம் ஒன்றிய ஆணையாளர்கள் கருணாநிதி, அனுராதா, ஆரூர்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் காங்கேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.