districts

img

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு

ஈரோடு, செப்.4- கருங்கல்பாளையத்தில் வீ்ட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப் புகளுக்கான ஒதுக்கீடு ஆணையை அமைச்சர் சு.முத்துச்சாமி வழங்கி னார். ஈரோடு, கருங்கல்பாளையம் பகு தியில் கட்டப்பட்டுள்ள வீ்ட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புக ளுக்கான ஒதுக்கீடு ஆணையினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச் சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி தலைமை வகித்தார். மாந கராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாநி லங்களவை உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ், ஈரோடு கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா ஆகியோர் முன்னிலை வகித் தனர். கருங்கல்பாளையம் பகுதி யில் 1983 - 84 ஆம் ஆண்டு 1072 குடியிருப்புகள் பழுதடைந்து இருந்த  காரணத்தால் அவற்றை இடித்து விட்டு புதிதாக கட்டப்பட்டன. இவ் வாறு கட்டப்பட்ட வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணை பயனாளிக ளுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரோடு, திண்டல், கதி ரம்பட்டி, நசியனூர், சித்தோடு ஆகிய பேரூராட்சி பகுதிகளில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை அமைச்சர் சு.முத்துச்சாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;