districts

திருப்பூரின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த அந்நியச் செலாவணியில் நிதி ஒதுக்கிடுக

திருப்பூர், டிச.22- பின்னலாடை ஏற்றுமதி நகர மான திருப்பூரின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவ தற்கு அந்நியச் செலாவணியில் நிதி ஒதுக்குமாறு கே.சுப்பராயன் எம்.பி. கோரியுள்ளார். இதுதொடர்பாக ஜவுளித் துறை அமைச்சருக்கு நாடாளு மன்ற அவை விதி 377இன்படி  அவைத் தலைவர் மூலம்  கே.சுப்ப ராயன் விடுத்துள்ள வேண்டுகோ ளில் கூறியிருப்பதாவது: திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி மூலம் ஒன்றிய அரசுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி கிடைக்கிறது. இந்த பெருந்தொகையை ஈட்டித்தரும் திருப்பூருக்கு வெளிநாட்டு வர்த்த கர்கள் பலர் வந்து செல்கின்றனர்.  லட்சக்கணக்கான தொழிலாளர் களுக்கு வேலை வாய்ப்பு வழங் கும் இந்நகரில் தொழிலாளர் போக் குவரத்து, சரக்கு போக்குவரத் துக்கு போதிய சாலை வசதிகள் இல்லை. தொழிலாளர் குடியி ருப்பு, பொது மக்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வச திகளும் இல்லை. இங்கிருக்கும் நிலையும் மிக மோசமாக உள் ளது. இங்குள்ள சாலைகளை தரம்  வாய்ந்ததாக அமைக்கவும், சிறந்த கட்டமைப்பு வசதிகளை ஏற் படுத்தவும், தொடர்ந்து பராமரிக்க வும் பெருந்தொகை தேவைப்படு கிறது. எனவே ஒன்றிய அரசு திருப் பூர் ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம்  கிடைக்கும் அந்நியச் செலாவணி யில் ஆண்டுக்கு ஒரு சதவிகிதம் தொகையை திருப்பூரில் கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவ தற்கு அவசியம் ஒதுக்க வேண் டும், என அவர் கேட்டுக் கொண் டுள்ளார்.

;