districts

img

வடிகால் வசதியின்றி பாதிக்கப்படும் விவசாயம்

ஈரோடு, செப். 18-  மழைக்காலங்களில் வடிவால் வசதி யின்றி விவசாயம் பாதிக்கப்படும் சூழலில் வருவாய்த்துறையினர் அக்கறை எடுத்து வடி கால் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்திற் குட்பட்ட கன்னப்பள்ளி சானாத்திகல்பகுதி யில் சுமார் 50க்கு மேற்பட்ட நன்செய், புன் செய் நிலங்கள் உள்ளது. இந்நிலங்களில் பிர தானமாக நிலக்கடலை, வாழை, மரவள்ளி, வெங்காயம் மற்றும் துவரை உள்ளிட்ட சாகு படி நடைபெறுகிறது. மழையை நம்பியும் கிணற்று பாசனம், ஆழ்துளை கிணறுகளை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகி றது. இந்நிலையில், இக்கிராமத்தை ஒட்டி யுள்ள சேலம் மாவட்டத்திற்குட்பட்ட பால மலையில்,  மழைக்காலங்களில் இப்பகுதி யில் பெய்யும் மழையால் விவசாயம் பெரி தும் பாதிக்கப்படுகிறது. உரிய வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் சாகுபடி வயலில் புகுந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஆங் காங்கே ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் மனை களை பிரிக்கிறோம் என்கிற பெயரில், இயற் கையான வடிகால் வசதிகளையும் மறைத் துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகமும், வரு வாய்த்துறையினரும் உடனடியாக தலை யிட்டு உள்ளாட்சி அமைப்போடு இனைந்து தேவையான வடிகால் வசதியை ஏற்படுத்திட  வேண்டும்.  விவசாயத்தை பாதுகாக்க வேண் டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.