districts

பொதுமக்களுக்கு இடையூறாக பிராங்க் வீடியோ எடுத்தால் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

கோவை, செப்.4- பொது இடங்களில் மக்களுக்கு இடை யூறு ஏற்படுத்தும் விதமாக பிராங்க் வீடியோ  (Prank Video) எடுப்பவர்கள் மீது பொது மக்கள் புகார் அளிக்கலாம் என கோவை மாந கர காவல்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு தேவையான நல்ல பயனுள்ள தகவல்களை, நாள்தோறும் நடக் கின்ற நாட்டு நடப்புகளை உடனுக்குடன் சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்து கொள்கின் றோம். தகவல் பரிமாறும் களத்தை கடந்து சமூக வலைதளங்களான யூடியூப் உள்ளிட் டவை லட்சக்கணக்கில் பொருள் ஈட்டும் வணிக தளமாகவும் மாறியிருக்கின்றன. செய்தி, அரசியல் கருத்து பரிமாற்று களமாக வும் யூடியூப் வலைதளம் ஒருபுறம் இயங்கி  வந்தாலும், சேட்டை, குறும்பு தனங்களாலும் இணையம் ஆட்கொள்ளப்படுகிறது. குறிப் பாக பிராங் என்ற பெயரில் பொது வெளியில் நடக்கும் வரம்பு மீறல்கள் பொதுமக்களை வெகுவாக பாதித்திருக்கின்றன.

நடை மேடை, பூங்காக்கள் என பொதுமக்கள் சங்க மிக்கும் இடங்களில் பிராங் எனும் சேட்டை  யூடியூப் சேனல்களை வைத்துக்கொண்டு வாலிபர்கள் வீடியோக்களை எடுக்கின்ற னர். இதில், பெண்களும் அடங்குவர். அவ் வாறு பிராங் செய்பவர்கள் செய்யும் சேட்டை களும், குறுப்புத்தனங்களும் பொதுமக் களை மனதளவிலும், உடலளவிலும் கடுமை யாக பாதித்திருக்கின்றன. இதுதொடர்பாக கோவை மாநகர காவல் துறை விடுத்துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, பொதுமக்கள்‌ நடமாட்டம்‌ உள்ள இடங்களாகிய பூங்காக்கள்‌, நடை பயிற்சி மைதானங்கள்‌, பள்ளி வளாகங்கள்‌ போன்ற பல பகுதிகளில்‌, தனிநபர்கள்‌ சிலர் பொதுமக்களிடையே குறும்புத்தனமான செயல்களில்‌ ஈடுபட்டு, அவற்றை வீடியோக் களாக எடுத்து பிராங்க் வீடியோக்கள்‌ என்ற பெயரில் தங்களுக்கென்று யூ-டியூப்‌ சேனல்‌ வைத்துக்‌ கொண்டு அதில்‌ வெளியிட்டு வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. பிராங்க் வீடியோக்கள்‌ என்ற பெயரில்‌ வீடியோ எடுக்கும்‌ பலர்‌, அதை தொழில்முறை ரீதியாக செய்து யூ-டியூப்‌ சேனலில்‌ வெளியிட்டு அதன்‌ வாயிலாக பணமும்‌ சம்பாதித்து வருகின்ற னர்.

அமைதியான சூழ்நிலையை விரும்பி பூங்காக்களை நாடி வருபவர்கள், நடை பயிற்சிக்காக மைதானங்களுக்கு வருபவர் கள்‌‌, வணிக வளாகங்கள்‌ மற்றும்‌ பள்ளி,  கல்லூரிகளுக்கு செல்பவர்கள்‌, இந்த பிராங்க் வீடியோ எடுப்பவர்களின்‌ செயல் பாடுகளால், மிகுந்த தாக்கத்தையும்‌, அமைதி யான சூழ்நிலைகளில்‌ திடீர்‌ பரபரப்பையும்‌ ஏற்படுத்துகின்றன. சில வீடியோக்களில்‌ நடிப் பவர்கள்‌ பொது வெளியில்‌ முகம் சுழிக்கும்‌ வண்ணம்‌ எதிர்பாலினத்தவரை எதேச்சை யாக நடப்பது போல் தொட்டு அல்லது கையை பிடித்து அநாகரீகமாக நடிக்கிறார்கள்‌. திடீ ரென்று நிகழும்‌ மேற்படி வரம்புமீறிய செயல் களானது, சம்மந்தப்பட்டவர்களுக்கு உடல் ரீதியாக அதிர்ச்சியையும்‌, மனரீதியாக திகைப் பையும்‌ ஏற்படுத்துகிறது. இதன்பின், அவர்களிடமே பிராங்க் வீடியோ எடுப்பவர்கள்‌, அதுகுறித்து தெரி வித்து சமாதானம்‌ செய்கின்றனர்‌. இருப்பி னும்‌ இச்செயல்கள்‌ பொதுமக்களிடையே, குறிப்பாக வயதானவர்கள்‌ மற்றும்‌ பெண்களி டையே, விரும்பத்தகாத எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இவ்வாறு எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோக்கள் யூடி யூப்‌ சேனல்களில்‌ சம்மந்தப்பட்ட நபரின்‌ அனுமதியின்றியும்‌, அவருக்கு தெரியாம லும்‌ வெளியிடப்படுவதால்‌ அவரது தனிப் பட்ட சுதந்திரம்‌ மற்றும்‌ இயல்பு வாழ்க்கை யில்‌ பாதிப்பு ஏற்படுகிறது.

இவ்வாறு, பிராங்க் வீடியோ எடுப்பவர்களின்‌ இச்செயலானது, அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத் திற்கு எதிரானது. கோவை மாநகரிலும்‌, சமீப காலமாக பிராங்க் வீடியோ என்ற பெயரில்‌ பந்தய சாலை போன்ற மக்கள்‌ கூடும்‌ இடங்களில்‌ நடைபெறும்‌ பிராங்க் வீடியோ எடுப்பவர்க ளின்‌ செயல்பாடுகள்‌ குறித்து பொதுமக்களி டையே அதிருப்தியும்‌, புகாரும்‌ எழுந்து வரு கிறது. எனவே, கோவை மாநகரில்‌ எவரா யினும்‌ பிராங்க் வீடியோ எடுத்தல்‌ என்ற விதத் தில்‌ பொதுமக்களின்‌ தனிப்பட்ட சுதந்திரத் திற்கும்‌ அவர்களது இயல்பு வாழ்க்கைக்கும்‌  பாதிப்பு உண்டாக்கும்‌ வகையில்‌ நடந்து கொண்டாலோ அல்லது அதுபற்றிய புகார்‌  வரப்பட்டாலோ உடனடியாக சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்யப் படுவதுடன்‌, அவரது யூடியூப் சேனலும்‌ முடக்கப்படும்‌. மேலும்‌, புகார்‌ தெரிவிக்கப்பட்ட நபர்க ளின்‌ மீது தெரிவிக்கப்படும்‌ குற்றச்சாட்டு களின்‌ அடிப்படையில்‌ இந்திய தண்டனைச்‌ சட்டத்தின்‌ பிரிவுகளின்‌ கீழ்‌ மட்டுமின்றி, தக வல்‌ தொழில்நுட்ப சட்டம்‌ உள்ளிட்ட பிற சிறப்பு சட்டப்‌ பிரிவுகளின்‌ கீழும்‌ வழக்கு தொடரப்பட்டு கடும்‌ சட்ட நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌ என்று, மாநகர காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.