தருமபுரி, டிச.9- சிப்காட் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்து வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெத் தலக்காரன் பள்ளத்தில் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத் தினர். தருமபுயில் சிப்காட் வளாகம் அமைப்பதற்காக அதகப்பாடி, தடங்கம், அதியமான் கோட்டை, பாலஜங்கமன அள்ளி ஆகிய இடங்களில் 1183.05 ஏக்கர் புறம் போக்கு நிலங்கள், 550.35 ஏக்கர் பட்டா நிலங்கள் என மொத்தம் 17 33.40 ஏக்கர் நிலங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டது. இந் நிலையில், நடந்து முடிந்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் தருமபுரி யில் சிப்காட் அமைப்பதற்கு மேலும் 1000 ஏக்கர் நிலம் எடுக்கப் படும் என முதலமைச்சர் அறிவித் தார். இதன் அடிப்படையில் சிப்காட் தொழில்துறை ஆணைய துணை தலைவர் நீரஜ்மிட்டல் நிலம் கைய கப்படுத்துவதற்கான இடங்களை பார்வையிட்டனர்.'
இதில் தருமபுரி அருகே உள்ள ஜீவாநகர், ஜாகிர், அதியமான்கோட்டை, பாலஜங்கமனஅள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற் கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, சிப்காட் அமைக்க தேர்வு செய்யும் இடத் தில் வீடுகள், கிணறு, தென்னை, வாழை, நெல், கேழ்வரகு, மஞ்சள் உள்ளிட்ட பணப்பயிற்கள் விளை யும் நிலமாக உள்ளது. இந்த நிலத்தை சிப்காட் அமைப்பதற் காக எடுத்துக் கொண்டால் இந்த நான்கு கிராம மக்களின் வாழ்வு அழிக்கப்படும் என கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரி வித்து பாதிக்கப்படும் விவ சாயிகள், பெண்கள் பட்டை நாமம் போட்டும், ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட னர்.