districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஆ.ராசா, வெற்றிமாறன் பேச்சுகள் திரிக்கப்பட்டுள்ளன - சுப.வீரபாண்டியன்

பொள்ளாச்சி, அக்.8-   ஆ.ராசா எம்பி., இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோரின் பேச்சுக்கள் சமூக வலைதளங் களில் திரிக்கப்பட்டுள்ளதாக திராவிட தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் கோவை மாவட்ட பொரு ளாளராகவும், பொள்ளாச்சி நகராட்சி தலைவ ராகவும் செயல்பட்டு வந்த மறைந்த மிசா விஜ யராகவனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  பொள்ளாச்சி தேர் நிலையம் அருகே பொள் ளாச்சி நகர செயலாளர் ரா.நவநீத கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில், திராவிட தமிழர் இயக்க  பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில், தேர்தல் களத்தில் நம்மோடு மோதுபவர்கள் நம்மை  ஜெயிக்க நினைப்பவர்கள். ஆனால் நம்மை அழிக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் தேர்தலில் நம்மோடு மோதுகிறது. சமீபத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோரின் பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் திரிக் கப்பட்டுள்ளன, என்றார். ராஜராஜ சோழன் இந்துவா? இல் லையா? என்பது இப்போது பிரச்சனை அல்ல. பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி  முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதற்கு முன்பு அடிக்கல் நாட்டப் பட்ட மதுரையில் இதுவரை பணிகள் துவங் கப்படவில்லை. உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் 95 சதவிகித பணிகள் முடிந்ததாக கூசா மல் பொய் சொல்கிறார். இதுபோன்ற பலவற் றில் மக்கள் உண்மையை தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே ஒரு கூட்டம் திசை  திருப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது, என்றார்.

தேக்கு மரம் வெட்டி கடத்தல் 3 பேருக்கு 1லட்சம் அபராதம்

சேலம், அக் 10- சேர்வராயன் வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட பொம் மிடி ஏரிமலை காப்பு காட்டில் அடையாம் தெரியாத நபர்கள் தேக்கு மரத்தை வெட்டி கடத்த முயற்சிப்பதாக வனத்து றைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரக அலுவ லர் பரசு ராமமூர்த்தி உத்தரவின்படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காப்புக்காட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்த 3 பேர் தேக்கு மரங்களை  வெட்டி கடத்த முயற்சி செய்வதை கண்டுபிடித்தனர். அந்த  கும்பலை வனத்துறையினர் பிடித்தனர்.  விசாரணையில், காடையாம்ம்பட்டி தாலுகா வீராட்சி யூரை சேர்ந்த பழனிவேல் (45), வேப்படியை சேர்ந்த அண்ணா மலை (45), பூம ராத்தூர் பகுதியை சேர்ந்த தனக்கொடி (40) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் வெட்டி 4 தேக்கு  மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசுக்கு சொந்த மான காட்டில் இருந்து விலை உயர்ந்த மரத்தை வெட்டி  கடத்துவதை இந்த கும்பல் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதையடுத்து பழனிவேல், தனக்கொடி, அண்ணாமலை ஆகிய 3 பேரையும் கைது செய்து சேலம் கோட்ட வன  அலுவலர் (பொறுப்பு) கவுதம் முன்னிலையில் வன ஊழி யர்கள் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து கைதான 3  பேருக்கும் சேர்த்து ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவிட்டார்.

செல்போன்கள் பறித்த இருவர் கைது

சூலூர், அக்.10- கருமத்தம்பட்டி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி விலை உயர்ந்த செல்போன்களை பறித்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த கே.ராயர் பாளையத்தை சேர்ந்த பிரவீன், சம்பவத்தன்று இரவு அன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாக னத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 இளைஞர்கள் வழி  மறித்து விலை உயர்ந்த ஒன் பிளஸ் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.  இதே போல், சோமனூரை சேர்ந்த கணேஷ் என்பவரது விலை உயர்ந்த செல்போனை கருமத்தம்பட்டியில் இருந்து  கணியூர் செல்லும் சர்வீஸ் சாலையில் மர்ம நபர்கள் வழி மறித்து பறித்துச் சென்றனர். இதுகுறித்து இருவரும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கரு மத்தம்பட்டி சுற்றுவட்டாரத்தில் ரோந்து பணியை தீவிர  படுத்தினர். வாகன சோதனையின் போது, சந்தேகத்துக்கிட மான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர் களை பிடித்து விசாரித்தனர். இருவரும் இருசக்கர வாகனத் தில் சென்று கணியூர் மற்றும் அன்னூர் சாலைகளில் செல் போன் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதில்,  மோப்பிரிபாளையத்தைச் சேர்ந்த ராஜரத்தினம், மற்றொரு வர் வாகரயாம் பாளையத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரை யும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை: 74 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

39 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை, அக். 10 -  தமிழகத்தில் குழந்தை திரும ணங்களைக் கட்டுப்படுத்தும் வகை யில் சமூக நலத் துறை சார்பில் பல் வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. இருப்பினும்,  தொடா்ந்து குழந்தைத் திரும ணங்கள் நடைபெற்று வருகின் றன. குழந்தை திருமணங்களைத் தடுத்து நிறுத்தும் வகையில் சமூக நலத்துறையினா் உள்ளாட்சி  அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்ற னா். ஊராட்சிகள் அளவில் குழந் தைகள் பாதுகாப்பு குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இருந்தும் குழந்தை திரு மணங்கள் தொடர்ந்து பதிவாகி வரு கின்றன. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜன வரி முதல் செப்டம்பர் வரை 74 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தை திருமணத்திற்கு காரணமாக இருந்த 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாவட்ட சமூக நல  அலுவலா் தங்கமணி கூறுகை யில், நாடு முழுவதும் திருமணம் செய்துகொள்ள பெண்களுக்கு 18  வயது, ஆண்களுக்கு 21 வயது  தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள் ளது. ஆனால் ஒருசில இடங்க ளில் குடும்ப பொருளாதார சூழல்,  காதல், குடும்ப கவுரவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தை திருமணங்கள் நடை பெற்று வருகின்றன.  கோவை மாவட்டத்தில் இந்த  ஆண்டு மட்டும் 74 குழந்தைத் திரு மணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள் ளன. இதில் 43 திருமணங்கள் திரும ணம் நடைபெற்ற பின்பும், 31 திரு மணங்கள் திருமணத்துக்கு முன்னும் தடுத்து நிறுத்தப்பட்டுள் ளன. இதில் திருமணத்துக்கு காரணமாக இருந்த 39 போ் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது என்றார்.

 ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சேலம், அக்.10- தொடர் விடுமுறையையொட்டி ஞாயி றன்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதி களவில் திரண்டனர். சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற  சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு  தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களி லிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். விடுமுறை நாளான ஞாயிறன்று சுற்றுலா  பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். தற் போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில் ஏற்காட்டிற்கு  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள் ளது. படகு இல்லத்தில் சுற்றுலா பயணி களின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பய ணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து  மகிழ்ந்தனர். ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், கரடியூர், அண்ணா பூங்கா, லேடிஸ்  சீட், ஜென்ஸ் சீட், ஆரஞ்சு பழ தோட்டம், காபி  தோட்டம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கையின் அழகை கண்டு ரசித் தனர். இதில் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற இடங்களில் சுற்றுலா பயணி களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட் டது. சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே புகைப் படம் எடுத்தும், குடும்பத்துடன் பொழுது போக்கியும் மகிழ்ந்தனர். ஏற்காட்டில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இத னால் ஏற்காட்டில் குளுமையான சீதோஷ்ண  நிலை காணப்படுகிறது. பனிப்பொழிவும் நில வியபடி உள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை தினமும் அதிகரித்தபடி உள்ள தால் ஏற்காட்டில் விளையும் காபி, வாசனை திரவியங்கள், ஏற்காடு மலையில் விளையும் ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள், வீட்டில் வைத்து  வளர்க்கக்கூடிய அழகு செடிகள், பழ வகை  செடிகள், அழகு சாதன பொருட்களை சுற் றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென் றனர்.

காவல்துறை அடித்ததாக புகார் கொடுத்தால் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கினார் என பதிவு செய்வதா?

ஈரோடு, அக்.10- கடந்த 18.7.2019 விவசாய நிலங்களில் மின்  கோபுரம் அமைப்பதை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கொங்கு கலை யரங்கம் எதிரில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் கைது  செய்தனர். அப்போது வயதான இளங்கோ என்பவர் இழுத்துச் செல்லப்பட்டு வண்டி யில் ஏற்றப்பட்டார். அப்போது கையில் நகக் கீறல், உட்காயம் ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட பவானி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் சிகிச்சை  பெற்று வந்தார். இது சம்பந்தமாக இளங்கோ வடக்கு காவல் நிலையத்தில்  புகார் செய்தார். காவல் துறையினர் அடித்ததால் தான் தனக்கு இவ் வாறு நேரிட்டது என புகாரில் கூறியிருந்தார்.  ஆனால், காவல் நிலையத்தில் அடையா ளம் தெரியாத நபர் அடித்தனர் என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இது குறித்து பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை. இந்நிலையில், இளங்கோ தகவல் அறி யும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்துள் ளார். அதன் மூலம் பெற்ற தகவல்கள் திருப்தி யில்லாத நிலையில் மீண்டும் மனு செய்துள் ளார். அதன்படி தனது உயிருக்கு ஆபத்து  உள்ளது என இரண்டாவது மேல்முறையீட்டு மனுவில் கோரியபடி கடந்த வெள்ளியன்று  ஈரோடு காவல் பொது தகவல் அலுவலகத் தில் நேரில் வந்து ஆவணங்களை ஆய்வு செய்து தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கூடுதல் காவல் கண்காணிப் பாளரும், தலைமையிடம் மற்றும் பொது தக வல் அலுவலரிடமிருந்து அழைப்பு வந்தது. அதன்படி ஈரோடு காவல் பொது தகவல் அலுவலகத்திற்கு நேரில் சென்ற இளங்கோ  சென்று ஆவணங்களை ஆய்வு செய்துள் ளார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசா ரணையில் ஒருசில நாட்களில் சிஎஸ்ஆர் போட்டு தருவதாக உறுதியளித்தனர்.

லாட்டரி சீட்டு விற்பனை: பிணையில்லா ஓராண்டு சிறை 

சேலம்,அக்.10- தமிழகத்தில் லாட்டரி சீட்டு சட்டவிரோதமாக விற்பனை  செய்தவருக்கு பிணையில்லா ஓராண்டு சிறை தண்டனை  விதித்து சேலம் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.  சேலம் கோட்டை துபால் அகமது தெருவை சேர்ந்த வர் உஸ்மான் செரீப் (43), லாட்டரி வியாபாரி. இவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்வது  உள்ளிட்ட குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதனால் கடந்த ஆகஸ்டு மாதம் 2 ஆம் தேதி சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது. அப்போது அவரிடம் போலீசார் இனிமேல் ஒரு ஆண் டுக்கு எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என்று உறுதிமொழி பத்திரத்தில் எழுதி வாங்கினர். ஆனால் லாட்டரி வியாபாரி உஸ்மான் செரீப், மீண்டும் குற்ற செயல்களில் ஈடு பட்டதால் அவரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் துணை கமிஷனரும், மாநகர நிர்வாக செயல்துறை நடுவரு மான லாவண்யா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து  அவரை ஒரு ஆண்டு வரை ஜாமீனில் வெளியேவராத வகை யில் மத்திய சிறையில் அடைக்க மாநகர நிர்வாக செயல் துறை நடுவர் லாவண்யா உத்தரவிட்டார்.

யஸ்வந்த்பூர் - கண்ணூர் வாராந்திர சிறப்பு ரயில்

கோவை, அக்.8- யஸ்வந்த்பூரில் இருந்து அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 2-ந் தேதி வரை புதன் கிழமைகளில் காலை 7.40 மணிக்குப் புறப்படும் வாராந் திர சிறப்பு ரயில் (எண் 06283) அன்று இரவு 8.30 மணிக்கு கண்ணூரை சென்றடையும். இதேபோன்று, அக்டோ பர் 12-ந் தேதி முதல் நவம்பர்  2-ந் தேதி வரை புதன்கிழமை களில் இரவு 11 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்ப டும் சிறப்பு ரயில் (எண் 06283) மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு  யஸ்வந்த்பூரை சென்றடை யும்.

பருத்திக்கு கொள்முதல் விலையை  உடனடியாக நிர்ணயிக்க சைமா கோரிக்கை

திருப்பூர், அக். 10 - நூல் விலை ஏற்ற இறக்கத்தை தடுக்க நடப்பு பருவத்தில்  பருத்திக்கு உரிய கொள்முதல் விலையை உடனடியாக நிர்ண யிக்கும்படி தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் சைமா ஏ.சி.ஈஸ்வரன் கோரியுள்ளார்.  இது குறித்து ஒன்றிய ஜவுளி அமைச்சர் பியூஸ் கோய லுக்கு திங்களன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதா வது: கடந்த ஆறு மாதங்களாக பஞ்சு பதுக்கல் காரணமாக  பற்றாக்குறை நிலவியபோது ஒரு கேண்டி (360 கிலோ) பஞ்சு  ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. பருத்தி சீசன்  ஆரம்பமான உடன் 1 கேண்டி விலை ரூ.60 ஆயிரம் முதல் ரூ.65  ஆயிரம் வரை விலை குறைய வாய்ப்புள்ளது. எனவே மத்திய  அரசு பருத்திக்கான ஆதார விலையை உடனடியாக நிர்ண யிக்க வேண்டும். முதல் தரம் குவிண்டால் ரூ.8 ஆயிரம், இரண் டாம் தரம் குவிண்டால் ரூ.7 ஆயிரம் என நிர்ணயிக்க வேண் டும். இந்த விலையை ஜின்னர்ஸ், வியாபாரிகள் தர மறுத்தால்  சிசிஐ (இந்திய பருத்திக் கழகம்) தலையிட்டு கொள்முதல் செய்து அரைத்து நியாயமான விலையில் விநியோகம் செய்ய  வேண்டும்.  மேலும், உள்நாட்டு தேவை போக மீதமுள்ள பஞ்சை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும். மாதம் 5 லட்சம் பேல்  மட்டுமே ஏற்றுமதி செய்யவும், அதற்கு மேல் தடை விதிக்கவும்  வேண்டும். பெரும் வியாபாரிகள் பருத்தி கொள்முதல் செய்து  பதுக்கி வைத்து விலை ஏற்றுவதை தடை செய்ய வேண்டும்.  இதன் மூலம் ஜவுளி தொழில், ஆடைத் தொழில் செய்வோ ருக்கு உதவியாக இருக்கும், தொழிலாளர்களுக்கு வேலை  வாய்ப்பு நன்றாக இருக்கும், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி ஏற் படும் என்று சைமா கூறியுள்ளது.

ஹவுசிங் யூனிட்டில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 10 - திருப்பூர் தெற்கு ஒன்றியம் முதலிபாளையம் ஊராட்சி ஹவுசிங் யூனிட் சிஐடியு கட்டுமானத் தொழிற்சங்க கிளை  சார்பில் ஹவுசிங் யூனிட் மக்களின் அடிப்படை பிரச்சனை களை நிறைவேற்ற வலியுறுத்தி ஞாயிறன்று டி.பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டிட சங்க மாநில பொதுச் செயலாளர் டி.குமார், சங்க தாலுகா செயலா ளர் ரமேஷ், மாதர் சங்க தெற்கு ஒன்றிய தலைவர் எஸ். ஜானகி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கே.மணி (எ) முருகசாமி மற்றும் எம்.குமரேசன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றினர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின்  தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.மகேஷ், சிட்கோ கிளைச் செயலாளர் எஸ்.கருப்புசாமி, வாலிபர் சங்க தெற்கு  ஒன்றியகுழு உறுப்பினர் ரஞ்சித் உள்பட திரளானோர் கலந்து  கொண்டனர்.

சிஐடியு பனியன் சங்க ஊத்துக்குளி ஏரியா பேரவை

திருப்பூர், அக். 10 - சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கத்தின் ஊத்துக்குளி ஏரியா கமிட்டி பேரவை கூட்டம் ஞாயிறன்று ஊத்துக்குளி சிஐ டியு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பேரவைக்கு ஏரியா கமிட்டி தலைவர் எஸ்.மாரிமுத்து தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குமார் துவக்கி வைத்து உரையாற்றினார். சங்க செயலாளர்  வி.கே.பழனிச்சாமி வேலை அறிக்கை முன்வைத்தார்.  புதிய  நிர்வாகிகளாக தலைவர் வி.கே.பழனிசாமி, துணைத்தலை வர் எஸ்.மாரிமுத்து, செயலாளர் சேட் என்கிற சுப்பிரமணி யம், பொருளாளர் லோகநாதன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். சங்க பொதுச் செயலாளர் ஜிசம்பத் நிறைவுரையாற் றினார்.

சிஐடியு கட்டுமான தொழிலாளர்  சங்க கோரிக்கை மாநாடு

திருப்பூர், அக்.10 - திருப்பூர் வடக்கு ஒன்றியம் கட்டிட கட்டுமானத் தொழிலா ளர் சங்கத்தின் 11 ஆவது கோரிக்கை மாநாடு ஞாயிறன்று நடை பெற்றது. சிஐடியு மாவட்ட தலைமை அலுவலகத்தில் சங்கத் தின் மாவட்ட துணை தலைவர் கே.சௌந்தர்ராஜன் தலைமை யில் நடைபெற்ற இம்மாநாட்டில் மாவட்ட செயலாளர் ஏ. ராஜன் துவக்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் பி.ரமேஷ்  வாழ்த்தினார். மாநாட்டை நிறைவு செய்து மாநில செயலாளர்  டி.குமார் பேசினார். இதில் சங்கத்தின் வடக்கு ஒன்றிய புதிய  தலைவராக எஸ்.சுப்பரமணி, செயலாளராக ஆர்.சக்திவேல்,  பொருளாளராக சி.மனோகர் உள்ளிட்ட 22பேர் கொண்ட  புதிய நிர்வாக குழு அமைக்கப்பட்டது.

ஆளுநருக்கு திருக்குறள் அனுப்பிய வாலிபர்கள்

திருப்பூர், அக். 10- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஊத்துக்குளி தாலுக்கா  குழுவின் சார்பில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்கு றள் புத்தகம் அனுப்பும் இயக்கம் ஊத்துக்குளி டவுன் தபால்  நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில குழு உறுப்பினர் சௌந்தர்யா, தாலுக்கா தலைவர் லெனின், தாலுக்கா துணை செயலாளர் சரவணன் மற்றும் மார்க்ஸ், சசி கலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தருமபுரியில் விபத்து: 3 பேர் சம்பவ இடத்தில் பலி

தருமபுரி, அக்.10- தருமபுரி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலியே பலியாகினர்.  இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். தருமபுரி நகரம், குமாரசாமிப்பேட்டையை சேர்ந்த 5 பேர்  நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தருமபுரி நான்கு ரோட்டில் உள்ள ஆவின் பால கத்தில்  காரில் தேனீர் அருந்த சென்றனர். தேனீர் அருந்திய பின் னர் 5 பேரும், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சவு ளூர் மேம்பாலம்  சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த  வழியாக சென்ற லாரியின் பின்புறத்தில் கார் மோதி விபத்துக் குள்ளானது. இதில் ராகுல், சந்தோஷ், ஜீவபாரதி ஆகிய 3  பேரும் சம்பவ இடத்திலியே உயிரிழந்தனர். மேலும் படுகா யத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த  கார்த்திக், கவியரசு ஆகியே இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள  தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.  விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை தருமபுரி நகர காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்து வனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தருமபுரியில் தேநீர்  அருந்த சென்றவர்கள் லாரியில் மோதி  3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை போக்சோவில் சிறுவன் உட்பட 2 பேர் கைது

கோவை, அக்.10- அன்னூர் பகுதியில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் உட்பட 2 பேரை காவல் துறையினர் போக்சோ வில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், அன்னூர் பகுதியை சேர்ந்த 17 வயது  சிறுமி. இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு கோட்டை பாளை யம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (22) என்ப வருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில், சிறுமி கர்ப்பமா னார். சம்பவத்தன்று பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து சிறுமி  மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத் துவர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட போது, குழந்தை திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இதுகு றித்து அன்னூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த  அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோன்று, அன்னூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் ஐடிஐ படித்து வருகிறார். இவர் ஐடிஐ சென்று விட்டு  வருவதாக வீட்டில் கூறிச்சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிபார்த்தும் கிடைக்க வில்லை. இதுகுறித்து அவரது தந்தை அன்னூர் போலீசில்  புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த மாயமான, மாணவியை தேடி வந்தனர். அப்போது சிறு மியின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு மேற்கொண்ட னர். அதில் சிறுமி வெளியூரில் இருந்தது தெரியவந்தது. போலீ சார் அங்கு விரைந்து சென்று சிறுமி மற்றும் சிறுமியுடன் தங்கி இருந்தவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், சிறுமியுடன் இருந்தது 17 வயது சிறுவன் என்பதும், அவர் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று  பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதனைய டுத்து போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதன்பின் சிறுவனை கோர்ட் டில் ஆஜர்படுத்தி கோவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்த னர்.

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு

தருமபுரி, அக்.10- நல்லம்பள்ளி அருகே குட்டைகள் அமைத்து வளர்க்கப்பட்ட ஒரு டன் ஆப்பிரிக் கன் கெளுத்தி மீன்கள் அழிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள வெத்தலக்காரன்பள்ளம் கிராமத்தில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை குட்டை அமைத்து வளர்த்து வரு வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந் தது. இதனைத்தொடர்ந்து வட்டாட்சியர் ஆறு முகம், மீன்வள உதவி இயக்குனர் கோகுல ரமணன் தலைமையிலான அதிகாரிகள் வெத் தலக்காரன்பள்ளம் கிராமத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வயல் களுக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் 3  செயற்கை பண்ணை குட்டைகள் அமைத்து  தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. மேலும், ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் களை வெளிமாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பதற்காக வளர்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 குட்டைகளில் இருந்த ஒரு டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் களை பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொண்டு மூடி அழித்தனர்.  தீக்கதிர் செய்தி எதிரொலி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் தரும புரி மாவட்டத்தில் அதிகம் வளர்த்து வருவ தும், இதனை உட்கொள்பவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி நமது தீக்கதிர் நாளிதழில் விரிவான செய்தி வெளியிட்டி ருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவில் உண்டியலை உடைத்து திருட்டு 

இளம்பிள்ளை, அக்.10 -  சங்ககிரி அருகில் பழமையான கோவில் உண்டியலை உடைத்து திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்துள்ள அரசிரா மணி பேரூராட்சிக்குட்பட சூரிய மலையின் அடிவாரத்தில் மிக வும் பழமையான அருள்மிகு வெள்ளூற்று பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டி லுள்ள இந்த கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனியன்று  பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இந்நிலையில், கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டிய லில் சனிக்கிழமை பக்தர்கள் காணிக்கையாக அதிக அளவில் பணம் செலுத்தியதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் ஞாயிறன்று இரவு உண்டியலை உடைத்து கொள் ளையடித்துச் சென்றுள்ளனர்.  இக்கோவிலில் சிசிடிவி கண் காணிப்பு கேமராக்கள் வைத்திருந்த போதிலும் அதனை யும் பொருட்படுத்தாமல்  உண்டியலை உடைத்து கொள்ளை யடித்துச் சென்றுள்ளனர்.  இது சம்மந்தமாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தேவூர் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத் தும், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் கோவில் உண்டி யலை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.