districts

கனிம வள கொள்ளையில் அதிமுக பிரமுகர் காப்பாற்ற முயற்சிக்கும் காவல் ஆய்வாளர்

ஈரோடு, ஜூலை 5- சென்னிமலை அருகே கனிம வளங்களை கொள்ளையடித்த வழக் கில் அதிமுக பிரமுகரை காப்பாற்ற  உண்மைகளை மறைக்கும் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக் கக் கோரி காவல் கண்காணிப்பா ளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சென்னிமலை ஒன்றியம், எக்கட்டாம்பாளையத்தில் வர லாற்று சிறப்பு மிக்க மாமாங்கம் குளம்  உள்ளது. இதற்குச் செல்லும் சாலை  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அத் துடன் அப்பகுதியில் பல கோடி மதிப் பிலான கற்பாறைகள் வெட்டியெ டுக்கப்பட்டுள்ளன. இந்த கற்பாறை களை அதிமுக ஒன்றிய செயலாளர்  ப.கோபாலகிருஷ்ணன் வெட்டி  திருடி எடுத்துள்ளதாக கூறப்படு கிறது. இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம் மற்றும் சென்னிமலை பூப் பறிக்கும் மலை பாதுகாப்பு இயக் கத்தினர் முதலமைச்சர் உள்ளிட் டோருக்கு ஆதாரத்துடன் அறிக்கை அளித்துள்ளனர்.  இதுபற்றி விசாரணையில் நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினர் எங்கும் தெரி விக்கவில்லை. எனவே, இது மிகைப் படுத்தப்பட்ட மனு என்று விசார ணையை முடித்துள்ளார் காவல்  ஆய்வாளர். ஆகவே உண்மைகளை  மறைக்க முயலும் காவல் ஆய் வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வேறு ஒரு விசாரணை அதி காரியை நியமித்து நேர்மையான புலன் விசாரணையை மேற் கொள்ள வேண்டும் என காவல் கண் காணிப்பாளரிடம் இவ்வமைப்பினர் மனு அளித்துள்ளனர்.