districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சாலை வசதி கேட்டு மனு

ஈரோடு, ஜூலை 5- ஈரோடு, பள்ளபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில்  சாலை வசதி கேட்டு அப்பகுதியினர் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், எல்லீஸ் பேட்டை பகுதி, அண்ணா காலனியில் ஏராளமான மக்கள்  வசித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக இப்பகுதி யில் சாலை வசதி இல்லாததால் மாணவர்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவசர ஊர்தியான 108 ஆம்புலன்ஸ் வாகனம்  கூட வந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதுகுறித்து, பள்ளபாளையம் பேரூராட்சி நிர்வாகத் திற்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் உரிய தலையீடு செய்து சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்  என ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நீரில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி

சேலம், ஜூலை 5- ஆத்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஒன்றரை வயது பெண் குழந்தை, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி, 5 ஆவது வார்டுக் குட்பட்ட முல்லைவாடி, கம்பன் தெரு பகுதியைச் சேர்ந்த விஜயராஜ், அதேபகுதியைச் சேர்ந்து திவ்யபாரதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களது ஒன்றை வயது பெண் குழந்தையான அத்விகா, செவ்வா யன்று இரவு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள மூன்றடி ஆழம் கொண்ட சிறிய தண்ணீர்  பேரல் ஒன்றில், விளையாடிக் கொண்டிருந்த அத்விகா தவறி  விழுந்ததாக ௯றப்படுகிறது. அதே நேரத்தில் குழந்தையை காணாமல் வீடு முழுவதும் அவரது உறவினர்கள் தேடி வந்த  நிலையில், வெளியே சென்று பார்க்கும் போது தண்ணீர் பேரலில் அத்விகா மயங்கி நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு பெற் றோர், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தை அத்விகா உடலை மீட்டு உடற்கூறு  ஆய்வுக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

சூலூர், ஜூலை 5- ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி யுள்ளனர். கோவை மாவட்டம், சுல்தான் பேட்டை  அருகே உள்ள  பச்சார்பாளையத்தில் தமிழ்நாடு உழவர் தினத்தை முன்னிட்டு,   போராட்டங்களில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு தமிழக விவ சாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வீரவணக்கம்  செலுத்தப் பட்டது. இதனையடுத்து. 10 அம்ச கோரிக்கைகளை  வலியு றுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. 

சாலையில் செல்லும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க மக்கள் கோரிக்கை

தருமபுரி, ஜூலை 5- சாலையில் செல்லும் கழிவுநீரால் சுகா தார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ள நிலை யில், உடனடியாக கால்வாயை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 31ஆவது வார்டு பாரதி புரத்தில் ராஜீவ்காந்தி தெரு, பாரதியார் தெரு,  விவேகானந்தர் தெரு உள்ளிட்ட 10க்கும் மேற் பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில்  கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல வருடங்களுக்கு முன்பு  கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயில் ஆங் காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்  பல ஆண்டுகளாக தூர்வாராமல் உள்ளது.  இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல்  சாலையிலும், அருகில் உள்ள காலிமனை களில் தேங்குகிறது. மேலும் கழிவுநீர் தாழ் வான குடியிருப்பு பகுதிகளில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதி களவில் உற்பத்தியாகுகிறது. மேலும், சுகா தார சீர்கேடு ஏற்பட்டு  நோய் பரவும் அபாயம்  உள்ளது. இது குறித்து  நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள்  வேதனையுடன் தெரிவித்தனர். எனவே, கால்வாயை சீரமைத்து கழிவுநீர்  தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூரில் காவல் வாகனம் மோதி பள்ளி மாணவி பலி

திருப்பூரில் காவல் வாகனம் மோதி பள்ளி மாணவி பலி திருப்பூர், ஜூலை 5 – திருப்பூரில் காவல் வாகனம் மோதியதில் இருசக்கர வாக னத்தில் தாயுடன் சென்று கொண்டிருந்த எட்டு வயது பள்ளி  மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருப்பூர் - காங்கேயம் சாலை நல்லூர் காவல் நிலையம்  அருகே ஊர்க்காவல் படை காவலர் வீரசின்ன கண்ணன்  (29) என்பவர் காவல்துறை வாகனத்தை ஓட்டி வந்தார். அவ ருக்கு முன்புறமாக ராஜேஸ்வரி என்பவர் விஜயாபுரம் பள்ளி யில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த தனது எட்டு வயது மகள்  திவ்யதர்ஷினியை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து  வந்து கொண்டிருந்தார். நல்லூர் அருகே வந்தபோது எதிர் பாராத விதமாக காவல் வாகனம் அவர்கள் மீது மோதியதில்  திவ்யதர்ஷினி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து  காவல் வாகனத்தில் சிக்கி உயிரிழந்தார். தாய் ராஜேஸ்வரி பலத்த காயங்களுடன் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள்  காவல்துறை வாகனத்தையும், வீரசின்ன கண்ணனையும் சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத் திற்கு வந்த காவல் துணை ஆணையர் வனிதா உள்ளிட்ட காவ லர்கள் விபத்தை ஏற்படுத்திய ஊர்க்காவலரை மீட்டு தனியாக  அமர வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த சம்பவத்தால் திருப்பூர் காங்கே யம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே  காவல்துறையினர் அப்பகுதி மக்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேசினர். வீரசின்ன கண் ணன் (29) குடிபோதையில் இருந்ததாக பொதுமக்கள் குற்றச் சாட்டினர். அதேசமயம் இருசக்கர வாகனத்தில் மாட்டியிருந்த  பேக் நழுவி கீழே விழுந்ததாகவும், அதை பிடிக்க முயன்றதால்  தாயும், மகளும் தடுமாறி கீழே விழுந்து விட்டதாகவும், அப் போது பின்னால் வந்த காவல் வாகனம் பிரேக் பிடிக்க முயன் றும் முடியாமல் சிறுமி மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும் காவல் துறையினர் கூறினர்.

முகில் பள்ளி குழந்தைகள் ஊர்வலம்

திருப்பூர், ஜூலை 5 - திருப்பூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள முகில் கிட்ஸ் நர் சரி பிரைமரி பள்ளி மாணவர்கள், சர்வதேச அளவில் கடைபி டிக்கப்படும் நெகிழிப்பை இல்லாத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். பள்ளி தலைமையா சிரியர் கெளரிசங்கர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஊர்வ லத்தில் மாணவர்கள் பதாகைகள் ஏந்தி பங்கேற்றனர்.

இன்று மின்தடை

திருப்பூர், ஜூலை 5 - திருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு  பணிகள் நடைபெற இருப்ப தால், இன்று காலை 9 மணி  முதல் மாலை 4 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. மின்வினியோகம் தடைப்படும் பகுதிகள்: அவிநாசி ரோடு, புஷ்பா  தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுஸிங் யூனிட், முத்து சாமி வீதி விரிவு, கேஆர்இ.  லே-அவுட், எஸ்ஆர்.நகர் வடக்கு, நேதாஜி வீதிம் கும ரன் வீதிம் பாத்திமா நகர்ம் டெலிபோன் காலனிம் வித்யா நகர்ம் எம்ஜிஆர். நகர், பாரதி நகர், வலையங் காடு, முருங்கம்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சி புரம், பூத்தார் தியேட்டர் பகுதி, சாமுண்டிபுரம், ஆசார் நகர், நாராயணசாமி நகர், காந்தி நகர், டிடிபி மில் லின் ஒரு பகுதி, சாமிநாத புரம்.

பருத்தி ஏலம்  

 அவிநாசி,ஜூலை 6- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்று வருகிறது.  அவிநாசி கூட்டுறவு விற் பனை சங்கத்தில் புதனன்று  நடைபெற்ற பருத்தி ஏலத் தில், ரூ.20 லட்சத்து 75 ஆயி ரத்துக்கு  பருத்தி ஏல வர்த்த கம் நடைபெற்றது.  மொத்தம்  1089 பருத்தி மூட்டைகள் வந் திருந்தன. அவிநாசி,  புளியம் பட்டி, குன்னத்தூர், ஆத்தூர்,  மேட்டூர், கோபி, நம்பியூர்,  மலையப்பாளையம், சத்தி யமங்கலம், கொள்ளேகால்,  அந்தியூர், அத்தாணி ஆகிய  பகுதிகளிலிருந்து 204 பருத்தி  விவசாயிகளும்,  7 பருத்தி  வியாபாரிகளும் ஏலத்தில்  பங்கேற்றனர்.

மூதாட்டி மர்ம மரணம்: சிபிஎம் தலையீட்டால் உடற்கூறாய்வு

சேலம், ஜூலை 5- மூதாட்டி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையீட்டால் மூதாட்டிக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (68). இவர் கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று உடலில் காயங்களுடன் இறந்து  கிடந்தார். இருப்பினும் உறவினர்கள் மறைந்த மூதாட்டியை அடக்கம் செய்தனர். இதனைத் தொடர்ந்து உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அணுகினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் றந்த மூதாட்டியின் பேரன் சுரேஷ்குமார் ஆகியோர் மல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார். அந்த புகார் மனுவில், எனது பாட்டி சின்னப்பொண்ணு தலையில் காயங் களுடன் இறந்து கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாமோ? என்ற சந்தேகம் உள்ளது. எனவே, பாட்டி யின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து புதனன்று சேலம் வட்டாட்சியர், மல்லூர் காவல் ஆய்வாளர், சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா ஆகியோர் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அதன் பின்பு மருத்துவர்கள், மூதாட் டியை உடற்கூறாய்வு செய்தனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராம மூர்த்தி, மூதாட்டியின் பேரனும், பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

கீழ்பவானி பாசன கால்வாய் - நடப்பது என்ன?

ரோடு, ஜுலை 5- கீழ்பவானி பாசன திட்டத்தில் கடைமடை விவசாயிகள் பாசன உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற போராட்ட மும், அதற்கு எதிரான போராட்டமும் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. கீழ்பவானி பிரதான கால்வாயானது மங்களபட்டியில் முடிவடைகிறது. பாசன திட்டத்தில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பிரதான கால்வா யின் கடைமடை மற்றும் நான்கு பகிர்மான கால்வாய்களின் கடைமடை பகுதிகளுக்கு உரிய தண்ணீர், உரிய காலத்தில் கிடைப்பதில்லை. 68 ஆண்டுகளான நிலையில் கால்வாயின் கட்டுமானங்கள் பலவீனமடைந்துள்ளது. கரைகளும் வலு விழந்து விட்டது. இதனால் வினாடிக்கு சுமார் 900 கன அடி தண்ணீர் உபரியாக கசிகிறது. இதனால் கடைமடையில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன உரிமையை இழந்து வரு கிறது. இந்நிலையில், அதன் உரிமையைப் பாதுகாக்கின்ற வகை யில் அரசாணை 276 வெளியிடப்பட்டது. இதனை முழுமை யாக நிறைவேற்ற வேண்டும் என உயர்நீதிமன்றமும் ஆணை யிட்டுள்ளது. எனவே கடைமடை விவசாயிகளின் உரிமை யைப் பாதுகாக்க நீர்வளத்துறையின் வடிவமைப்பில் கீழ் பவானி சீரமைப்பு வேலைகளை முழுமையாக செய்து முடிக்க வேண்டும் என முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பும், ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கமும் போராடி வரு கிறது. செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் தில் உள்ள பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். இதற்கிடையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 அன்று அணை திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் மராமத்து  பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்றது. ஆங்காங்கு ஒரு சாரார் இந்த பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து  வேலை செய்வதற்கான உத்தரவாதத்தை நீர்வளத்துறையும், மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும். அவ்வா றில்லையெனில் குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப் படுமா? என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தவறான சிகிச்சை: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல், ஜுலை 5- தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டவ ருக்கு மருத்துவமனை நிர்வாகம் ரூ.5 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், ஸ்டேட் பேங்க் கால னியில் வசித்து வரும் ராஜகோபாலன் மகன்  கிருஷ்ணமணி என்பவருக்கு கடந்த 2016 ஜூன் 30 ஆம் தேதியன்று சாலை விபத்து ஏற் பட்டு, வலதுகாலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் 12 நாட்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த  பின்னரும், காலில் காயம் குணமாகா வில்லை. அதனை சரி செய்ய மீண்டும் பிளாஸ் டிக் அறுவை சிகிச்சை செய்யலாம் என மருத் துவர் தெரிவித்துள்ளார். இதனை நம்பி மீண் டும் அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 2016 ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட் கள் உள் நோயாளியாக இருந்துள்ளார். இதன்பின் நான்கு மாதங்கள் கழித்தும்,  கால் குணமாகாததால், கோவையிலுள்ள உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவம னைக்கு சென்று ஆலோசனை செய்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் முந்தைய அறுவை சிகிச்சையில் எலும்புகள் ஒன்று சேராதால் மீண்டும் அறுவை சிகிச்சை செய் யப்பட்டு ஒன்று சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து 2016 டிசம் பர் மாதத்தில் மீண்டும் அறுவை சிகிச்சை  செய்துள்ளார். இதற்கிடையே முதலில்  சிகிச்சை செய்த மருத்துவமனை கவனக் குறைவாக செயல்பட்டதாக, கிருஷ்ணமணி கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத் தில் 2018 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய் தார். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், செவ்வாயன்று நீதிபதி வீ.ராம ராஜ் தீர்ப்பு வழங்கினார். அதில், முதலாவது அறுவை சிகிச்சையில் எலும்புகளை இணைக்க பயன்படுத்தப்பட்ட உபகரணம்  (rod) சரியான நிலையில் பொருத்தப்படாத தால், கிருஷ்ணமணிக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதிலிலும் பிரச்ச னையை தீர்க்க சம்பந்தப்பட்ட மருத்துவ மனை தவறிவிட்டது. வேறு மருத்துவமனை யில் மூன்றாவதாக அறுவை சிகிச்சை மூலம் பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது நிரூ பிக்கப்பட்டுள்ளது. இதனால் கவனக்குறைவாக மருத்துவ சிகிச்சை அளித்து சேவை குறைபாடு புரிந்த மருத்துவமனை பாதிக்கப்பட்ட கிருஷ்ண மணிக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவுகளுக் கான ரூபாய் இரண்டரை லட்சம் மற்றும் அவ ருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் இரண்டரை லட்சம் நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் பணம் வழங்கப்படும் நாள் வரை 9 சதவிகித வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

உதகை, ஜூலை 5- உதகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சி டிவிசன் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் கூடலூர் புளூஹில்ஸ் அணி வெற்றி பெற்றது. நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், உதகை மற்றும் கோத்தகிரியில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிசன் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், உதகையிலுள்ள தனியார் பள்ளி மைதானத்தில் சி டிவிசன் பிரிவிற்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. லீக் சுற்றுப் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற கோத்தகிரி பிக் மாஸ்டர்ஸ் மற்றும் கூடலூர் புளூ ஹில்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கூடலூர் புளூஹில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய கோத்தகிரி பிக் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அணி 14.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 71 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் 211 ரன்கள் வித்தியாசத்தில் கூடலூர் புளூ ஹில்ஸ் அணி வெற்றி பெற்று, சி டிவிசன் சாம்பியன் பட்டத்தை வென்றது.

ரூ.35 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

தருமபுரி, ஜூலை 5- அரூரில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.35 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  தருமபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தரும புரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் செவ்வாயன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு அரூர், மொரப்பூர், கம்பை நல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதி களில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர். 270க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1,350  பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த னர். இதில் பிசி ரகப்பருத்தி குவிண்டால் ரூ.5,858 முதல் ரூ.6,500 வரையும், கொட்டு ரகப்பருத்தி ரூ.3,090 முதல் ரூ.3,590 வரையும் ஏலம் போனது. மொத்தம் 1,350 மூட்டை பருத்தி ரூ.35 லட்சத்திற்கு ஏலம் போனது.

நிலங்களை தயார்படுத்தும் பணி தீவிரம்

உதகை, ஜூலை 4- கோத்தகிரியில் 2 ஆம் போக மலைக்காய்கறி சாகுபடிக்கு விளைநிலங்களை உரமிட்டு தயார்படுத்தும் பணியில் விவ சாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூல்கோல், பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த வெளிநாட்டு காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை காரணமாக, அறுவடை செய்த விளைநிலங்களில் மீண்டும் 2 ஆம் போக  விவசாயம் செய்வதற்காக விளைநிலத்தில் உள்ள மண்ணை  உழுது பதப்படுத்தி வருகின்றனர். விளைநிலங்களில் இயற்கை மற்றும் ரசாயன உரங்களை மண்ணுடன் கலந்து மீண்டும் விவசாயம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், தொடர் மழை காரணமாக நிலத்தில் டிராக்டர் கொண்டு உழுவதற்கு சிரமம் ஏற்படும் என்பதால் கடந்த ஒரு மாதமாக விவசாயம் செய்யாமல் இருந்தோம். தற்போது காய் கறி மண்டிகளில் பூண்டு, கேரட் உள்ளிட்ட மலை காய்கறி களுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. எனவே, மீண்டும் விவசாயம் செய்ய உள்ளதால், மண்ணின் வளத்தை பாதுகாக்க வேண்டி, ரசாயன உரத்துடன், இயற்கை சாண உரங்களையும் வாங்கி விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறோம். இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்தால் காய்கறி சாகுபடி அதிகரிக்கிறது. ஒரு லாரி சாண உரம் ரூ.30 ஆயிரம் ஆகிறது. ஒரு ஏக்கருக்கு ஒன்று முதல் 3 லாரி சாண உரம் தேவைப்படுகிறது. இயற்கை உரமிடு வதன் மூலம் மண்ணின் வளம் மேம்படுவதோடு, மகசூலும் அதிரிக்க வாய்ப்பு உள்ளது, என்றனர்.

குறைதீர் கூட்டம்

தருமபுரி, ஜூலை 5- தருமபுரி வருவாய் கோட் டத்திற்குட்பட்ட தருமபுரி, நல் லம்பள்ளி, பாலக்கோடு, பென் னாகரம், காரிமங்கலம் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ் வொரு மாதமும் முதல் வாரத் தில் நடத்தப்பட்டு வருகி றது. இதன்படி ஜூலை மாதத் திற்கான கோட்ட அளவி லான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தரும புரி உதவி ஆட்சியர் அலுவ லகத்தில் வெள்ளியன்று (நாளை) காலை 11 மணிக்கு நடைபெற்ற உள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.





 

;