districts

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கோழியை விழுங்கிய மலைப் பாம்பு

கோவை, ஜூன் 13- கோழியை விழுங்கி அசைய முடியாமல் கிடந்த 11 அடி  நீளம் கொண்ட மலைப் பாம்பை வனத்துறையினர் மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த அங்கலக்கு றிச்சியில் விவசாயி சிவராமன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் ஆடு, மாடு கோழி உள்ளிட்ட கால் நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல கோழிகளை திறந்து விடுவதற்காக  கோழி கூண்டுக்கு  அருகே செல்லும் போது அங்கே மலைப் பாம்பு ஒன்று கோழியை விழுங்கியவாறு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் கோழி கூண்டில் இருந்த சுமார் 11 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பை நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு  பிடித்து ஆழியார் பகுதியில் உள்ள அடர்ந்த வனத்தில் விட்ட னர்.

விடுதியில் சேர மாணவ, மாணவியர்க்கு அழைப்பு

ஈரோடு, ஜுன் 13- பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சீர்மரபின மாணவ, மாணவியர் விடுதிகளில் சேர விண் ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஈரோடு ஆட்சியர் ராஜகோ பால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் வெளியிட்டு உள்ள அறிக்கை யில், ஈரோடு மாவட்டம், சிவகிரி, மொடக்குறிச்சி, பெருந் துறை, கோபி, சென்னிமலை, வெள்ளோடு, நம்பியூர், சத்தி,  புன்செய் புளியம்பட்டி, தாளவாடி, அறச்சலூர், மலையப்பா ளையம், அந்தியூர், குருவரெட்டியூர், தேவர்மலை மற்றும்  காவிலிபாளையம் ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவர்க ளுக்கென 16 விடுதிகளும், பள்ளி மாணவியர்களுக்கெண 11  விடுதிகளும் உள்ளது. அதேபோல ஈரோடு, கோபி, பெருந் துறை, வேலம்பாளையம் மற்றும் அந்தியூர் ஆகிய பகுதிக ளில் 5 விடுதிகள் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்காக வும், சித்தோடு, கோபி, புன்செய் புளியம்பட்டி மற்றும் திட் டமலை ஆகிய பகுதிகளில் 4 விடுதிகள் மாணவிகளுக்காக வும் நடத்தப்படுகிறது. 

இவற்றில் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில் வோர் மற்றும் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ,  பாலிடெக்னிக் பயில்வோர் சேரலாம். மூன்று  வேளை உணவு வழங்கப்படும். 10 ஆம் வகுப்பு வரை  பயில்வோருக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படும்.  கல்லூரி விடுதிகளில் ஜமுக்காளமும், பள்ளி விடுதிகளில்  பாய்களும், மலை பிரதேச விடுதிகளில் கம்பளி மேலாடை களும் வழங்கப்படும். விருப்பமுள்ளோரின் பெற்றோரின்  ஆண்டு வருமானம்  ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க  வேண்டும். பள்ளி விடுதியில் உள்ள மாணவர்களுக்கு இம்மா தம் 14 ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் சேர ஜுலை 15க்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண வீடியோ வழங்காத நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கோவை, ஜூன் 13- திருமண வீடியோவை வழங்காத ஸ்டுடியோ உரிமை யாளர் இழப்பீடாக ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் வழங்க வேண் டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவை மாவட்டம், சரவணம்பட்டியை சேர்ந்த இந்து மதி, கே.மயில்சாமி ஆகியோர் கோவை மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், எங்கள்  குடும்ப திருமண நிகழ்வை வீடியோவில் பதிவு செய்ய வும், போட்டோ எடுக்கவும் கோவை காந்திபுரத்தில் உள்ள  நாட் போட்டோகிராபி நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந் தோம். இதற்காக முன் பணமாக ரூபாய் 1 லட்சத்து 35 ஆயி ரம் பெற்றுக் கொண்டனர். திருமணத்தை பதிவு செய்த  பின்னர் வீடியோ மற்றும் போட்டோவை கொடுக்கவில்லை. பின்னர் அந்த நிறுவனத்தை மூடிவிட்டு வேறு இடத்துக்கு இட மாற்றம் செய்து விட்டனர். அந்த முகவரியை அறிந்த அங்கு  சென்று கேட்டோம். ஆனால், பணத்தை திரும்பி தர வில்லை, வீடியோவும் கிடைக்காததால் குடும்ப உறுப் பினர்களிடம் காண்பிக்க முடியவில்லை. இதனால், மன உளைச்சல் ஏற்பட்டது. இதற்கு சம்பந்தப்பட்ட ஸ்டுடியோ உரிமையாளர் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று  கூறப்பட்டு இருந்தது. பின்னர், அந்த மனுவை விசாரித்த நீதி பதி தங்கவேலு ஸ்டூடியோ உரிமையாளர் பெற்ற பணம் 1  லட்சத்து 35 ஆயிரத்தை வழங்குவதுடன், ரூ.2 லட்சத்து 50  ஆயிரத்தை மன உளைச்சலுக்கு இழப்பீடாக வழங்க வேண் டும். மேலும், நீதிமன்ற செலவிற்காக ரூ. 5 ஆயிரம் வழங்க  வேண்டும் என உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

ஈரோடு, ஜூன் 13-  கொலை வழக்கில் கைதான 2 வாலிபர்கள் குண்டர் சட்டத் தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்டம், ஈவிஎன் சாலை ஸ்டோனி பாலம்  பகுதியில் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி அதிகாலை யில், 38 வயது நபர் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையான, நபரை இது வரை அடையாளம் காண முடிய வில்லை. அவரது உடல் அரசு செலவில் அடக்கம் செய்யப்பட் டது.

இந்த, கொலை வழக்கு தொடர்பாக ஈரோடு தெற்கு போலீ சார் வழக்குப்பதிவு விசாரித்து வந்த நிலையில், ஈரோடு மணல்  மேடு பகுதியை சேர்ந்த விஜய் (23), பெரியார் நகர் ஓடைப் பள்ளம் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் (28), ரஞ்சித், ஏழு மலை ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்ற உத்தர வுப்படி சிறையில் அடைத்தனர்.

இதில், விஜய், அருணாச்சலம் ஆகியோர் மீது ஏற்க னவே பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தது. இந்நி லையில், தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட விஜய், அரு ணாச்சலத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க  ஈரோடு தெற்கு போலீசார் காவல் துறை கண்காணிப்பாளர் ஜவகர் மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தனர்.

இந்த, பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் ராஜகோ பால் சுன்கார இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில்  அடைக்க உத்தரவிட்டார். இதன்பேரில், கோபி மாவட்ட சிறை யில் அடைக்கப்பட்டிருந்த விஜய் மற்றும் அருணாச்சலம் இரு வரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் திங்களன்று கைது  செய்து, காவல் துறை பாதுகாப்புடன் அழைத்து செல்லப் பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மூதாட்டியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

கோவை, ஜூன் 13- சுந்தராபுரம் அருகே மூதாட்டியை தாக்கியதாக 4 பேர் மீது  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

கோவை மாவட்டம், சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (86). இவரது கணவர்  சுப்பிரமணியம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு உயிரி ழந்து விட்டார்.  மகன் பாலகுருநாதன் வீட்டில் பழனியம் மாள் வசித்து வந்தார். தனது மகன் பாலகுருநாதன் இறந்து விட்ட நிலையில், பாலகுருநாதன் தனது வீட்டை செந்தில் குமார் என்பவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு வாடகைக்கு  விட்டு உள்ளார். அதன் பின்னர் வீட்டு வாடகையை செந்தில்குமார் கொடுக்காமல் தவிர்த்து வந்தார். பழனியம் மாள் பலமுறை வாடகை பணம் கேட்கும் போது, பாலகு ருநாதன் தன்னிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கியதாகவும், அதை  கொடுத்தால் தான் வீட்டை காலி செய்வேன் எனவும் செந்தில் குமார் கூறி உள்ளார்.

இந்நிலையில், பழனியம்மாள், அவரது இளைய மகன்  செங்கப்பன் ஆகிய இருவரும் செந்தில்குமாரிடம் வாடகை  கேட்க சென்று உள்ளனர். அப்போது, செந்தில்குமார், பாக்கி யம், தனபாலன், சோபன் உள்ளிட்டோர் பழனியம்மாளை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி உள்ளனர். இதில்,  மூச்சுத் திணறி கீழே விழுந்த பழனியம்மாளை அங்கி ருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில்,  செந்தில்குமார், பாக்கியம், தனபாலன், சோபன் ஆகி யோர் மீது சுந்தராபுரம் போலீஸார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்  பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

;