districts

img

உதகை செல்ல நீண்ட வரிசையில் வாகனங்கள்!

மேட்டுப்பாளையம், நவ.9- இ-பாஸ் கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஆய்விற்கு பின் னரே நீலகிரி மாவட்டத்தினுள் வாகனங் கள் அனுமதிக்கப்படுவதால் மேட்டுப் பாளையம், கல்லாறு சோதனைச்சாவடி யில் வாகனங்கள் அணிவகுத்து காத்து  நிற்கின்றன. நீலகிரி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாச ஸ்தலங்களுக்கு செல்ல இ - பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து தற்போது வரை இந்த இ பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. இந்த சூழலில் வெள் ளியன்று இ-பாஸ் நடைமுறையை, நீல கிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வா கங்கள் சரியான முறையில் பின்பற்ற வில்லை என்றும், இதனால், மலைப் பகுதியில் வாகனங்களில் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக உயர் நீதிமன் றம் கருத்து தெரிவித்து இருந்தது. மேலும், இ - பாஸ் நடைமுறையை கட்டா யம் உறுதிபடுத்த வேண்டும் என தெரி வித்திருந்தது. ஏற்கனவே இ - பாஸ் நடை முறை அமலில் இருந்து வரும் நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் இ - பாஸ் சோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, நீலகிரியின் நுழை வாயிலில் உள்ள மேட்டுப்பாளையம் வழியே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையம்  அடுத்துள்ள கல்லாறு சோதனைச் சாவடியில் அனைத்து வாகனங்களும் இ - பாஸ் பதிவு செய்து வருகின்றதா? என தீவிர சோதனையில் ஈடுபட்டு வரு கின்றனர். இதனால் சோதனைச்சாவடி களில் வாகனங்கள் நீண்ட தூரம் வாக னங்கள் அணி வகுத்து நிற்கின்றன. இ-பாஸ் சோதனைக்கு பின்னரே நீல கிரிக்குள் வாகனங்கள் அனுமதிக்கப் பட்டு வருகிறது.