districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பனியன் குடோனில் தீ விபத்து

திருப்பூர், ஜூலை 2 - திருப்பூர் பனியன் வேஸ்ட் குடோன், ஆடை தயாரிப்பு நிறு வனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்ச ரூபாய்  மதிப்பிலான பனியன் ஆடைகள் இயந்திரங்கள் எரிந்து சேதம்  அடைந்தன.  திருப்பூர் - காங்கேயம் சாலையில் உள்ள புதுப்பாளையம்  பகுதியில் கண்ணன், நாராயணன் ஆகியோருக்கு சொந்த மான 1 ஏக்கர் நிலத்தில், வாடகைக்கு பனியன் ஆடை தயா ரிக்கும் தொழிற்சாலை, பனியன் வேஸ்ட் குடோன் இயங்கி  வருகிறது. இந்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் விடுமுறை  தினம் என்பதால் ஞாயிறன்று தொழிலாளர்கள் பணியில் இல்லை. அருகிலுள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் தங்கி  வந்துள்ளனர்.  இந்நிலையில், இந்த பனியன் நிறுவனத்தின் பின்பகுதி யில் உள்ள வேஸ்ட் குடோனில் வைக்கப்பட்டிருந்த பனியன்  ஆடைகள் மீது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ வேக மாக பரவி அருகில் இருந்த பனியன் நிறுவனத்தில் ஏற்றுமதிக் காக தயார் நிலையில் இருந்த பின்னலாடை துணிகள், பின்ன லாடை இயந்திரங்கள் மீது பரவி அனைத்தும் தீயில் எரிந்து  சேதமானது, இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து தீயை அணைக்க உள்ளே செல்ல முடியாத ஒரு நிலை  ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு  தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர், 3 தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ  விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடை கள் இயந்திரங்கள் முற்றிலும் இருந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா? அல்லது வேறு  காரணங்களா? என நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரண மாக திருப்பூர், காங்கேயம் பிரதான சாலையில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

 கோவை, ஜூலை 2- கோவை விமான நிலையத்தில் ரூ.45.31 லட்சம் மதிப்பி லான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். உளவுத்துறையினருக்கு கிடைத்திருந்த தகவலின் அடிப்படையில், ஜூன் 30 தேதியன்று ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த இரண்டு ஆண் பயணிகள் வருகை மண்டபத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதிகாரிகள் அவர்களிடம் நடத்திய  சோதனையில், அந்த  பயணிகளின் தோள்பட்டை பை மற்றும் பேன்ட் பாக்கெட்டில்  செயின் வடிவில் தங்கம் மறைத்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. ஒரு பயணியிடம் இருந்து 395 கிராம் எடையுள்ள 24  காரட் தூய்மையான இரண்டு தங்கச் செயின்களும், மற்றொரு  பயணியிடம் இருந்து 359 கிராம் எடையுள்ள 24 காரட் தூய்மை யான இரண்டு தங்கச் செயின்களும் பறிமுதல் செய்யப் பட்டன. மொத்தம் 754 கிராம் எடையுள்ள 24 காரட் தூய்மையான நான்கு தங்கச் செயின்களின் மதிப்பு ரூ.45.31 லட்சமாகும். அவர்கள் இருவர் மீதும் சுங்கச் சட்டம், 1962-ன் கீழ் இரண்டு  வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் இரண்டு தங்க செயின்களும்  பறிமுதல் செய்யப்பட்டதாகவும் விமான நிலையம் ஞாயிறன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இருசக்கர வாகனம் திருட்டு ஒருவர் கைது, 7 வாகனங்கள் பறிமுதல்

திருப்பூர், ஜூலை 2 - திருப்பூரில் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபர்  கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து இரண்டு லட்சம்  ரூபாய் மதிப்பிலான ஏழு வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. திருப்பூர் மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள்  அச்சமடைந்து வந்தனர். இந்நிலையில் மாநகர காவல்  ஆணையர் பிரவீன் குமார் அபினவு உத்தரவின் பேரில்,  கொங்கு நகர் பகுதி உதவி ஆணையர் அணில் குமார்  தலைமையில் வடக்கு காவல் துறையினர் தீவிர வாகன  தணிக்கையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் வாகன தணிக் கையில் ஈடுபட்ட பொழுது, சந்தேகத்தின் அடிப்படையில், இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை  செய்தபொழுது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில்  கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை காவல்  நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் விக்கி என்கிற விக்னேஸ்வரன் என்பதும்,  இவர் திருப்பூர் - ஊத்துக்குளி சாலை எஸ்.பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் திருப்பூரில் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தை மட்டும் தொடர்ந்து  திருடி வந்தது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து காவல் துறையினர் அவரிடமிருந்து 7 இருசக்கர வாகனங்களை பறி முதல் செய்தனர்.  தொடர்ந்து இருசக்கர வாகனத்தை திருடிய விக்கி என் கின்ற விக்னேஸ்வரனை வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

வீட்டை இடிக்காமல்  நகர்த்தும் தொழில் நுட்பம்

திருப்பூர், ஜூலை 2 - திருப்பூரில் வீட்டை இடிக்காமல் நகர்த்தும் உள் நாட்டு தொழில் நுட்பமான ஹைட்ராலிக் சிப்டிங் மூலம் முதன் முதலாக 2 பெட்ரூம் உள்ள வீட்டு கட்டிடம் 25 அடி தூரம்  நகர்த்தப்பட்டது. திருப்பூர், பாளையக்காடு பகுதியில் முதன் முதலாக வீட்டை இடிக்காமல் வீட்டை நகர்த்தும் ஹைட்ராலிக் சிப்டிங்  என்ற உள்நாட்டு தொழில் நுட்பத்தின் மூலம் ஹைட்ராலிக் ஸ்க்ரூ ஜாக்கி பயன்படுத்தி கட்டிடத்தை அஸ்திவாரத்தில் இருந்து பிரித்து நகர்த்தும் செயல் முறையின் படி, 2 பெட்ரூம்  உள்ள கட்டிடம் 25 அடி தூரம் நகர்த்தப்பட்டது. இந்த  இரண்டு பெட்ரூம் கொண்ட வீட்டு கட்டடம் நகர்த்தும் பணியில்  இதற்கென பிரத்தியேகமாகப் பணிபுரியும் கட்டுமான வல்லு நர்கள், தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.மூன்று நாட்கள் இப்பணி நடைபெறும். இந்த ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தில் வீட்டை  நகர்த்துவதற்கு முன் வீட்டில் இருக்கும் பழைய தூண் களானது அடித்தளத்தில் அறுக்கப்பட்டு, புதிய அடித்தளத் தின் புதுத்தூண்களுடன் கம்பிகள் மூலம் இணைக்கப் பட்டு, ஜல்லி கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப் படுகின்றது. அதன் பின்னர் நாள் ஒன்றுக்கு 8 அடி வீதம், 3 நாட் களுக்கு 24 அடி தூரம் நகர்த்தப்படுகிறது. இந்த ஹைட்ராலிக்  சிப்டிங் தொழில் நுட்பத்தின் மூலம் சிறிய வீடு, பெரிய வீடு,  கோவில்கள், 5 மாடி கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்பு கள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் என எதுவாக இருந் தாலும் எவ்வளவு தூரம் நகர்த்தியும், உயர்த்தியும் விட லாம். புதிதாக ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு ஆகும்  செலவைக் காட்டிலும் இது போன்று தொழில் நுட்பத்தின் மூலம் வீட்டை உயர்த்துவதற்கும், நகர்த்துவதற்கும் ஆகும்  செலவு மிகக் குறைவு என செய்தியாளர்கள் சந்திப்பில் குமரன்  டெமாலிசர்ஸ் நிறுவனர் பொன்லிங்கம் தெரிவித்தார்.

நகராட்சி பொறியாளர் பணியிடைநீக்கம்

சேலம், ஜூலை 2- மேட்டூர் நகராட்சி பொறியாளரை பணியிடைநீக்கம் செய்து, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தர விட்டுள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சி பொறியாளராக மணி மாறன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் நகராட்சி ஆணை யாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், நங்கவள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் மணிமாறன் பணியாற்றியபோது முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கி டையே கடந்த ஜூன் 30 ஆம் தேதியுடன் ஓய்வுபெற இருந்த நிலையில், அவரை பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு  அரசின் நிர்வாக செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட் டுள்ளார்.

தேசிய பேட்மிட்டன் போட்டி ஈரோடு மாணவிகள் சாதனை

ஈரோடு, ஜூலை 2- தேசிய அளவிலான பேட்மிட்டன் போட்டியில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் சாதனை படைத்தனர். இந்திய பேட்மிண்டன் சங்கம் சார்பில், தேசிய அளவிலான சப் - ஜூனியர் பேட்மிண்டன் தரவரிசை போட்டி சண்டிகர் மற்றும் லக்னோவில் நடைபெற்றது. மேலும், சர்வதேச சப் - ஜூனியர் பேட்மிண்டன் போட்டிகளுக்கு இந்திய அணி வீரர் கள் தேர்வும் நடைபெற்றது. இப்போட்டியில் ஈரோட்டைச் சேர்ந்த மாணவிகள் அனன்யா அருண் மற்றும் ஆதிரா ராஜ் குமார் ஆகியோர் 15 வயதுக்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவில் தேசிய அளவில் 2 ஆம் தரவரிசை வீரர்களாக களம் கண்டனர். இதைத்தொடர்ந்து நடந்த இறுதிபோட்டியில் உத் தரகாண்ட் அணி தங்க பதக்கத்தையும், தமிழகத்தைச் சேர்ந்த  அனன்யா மற்றும் ஆதிரா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். மேலும், தனி நபர் போட்டியில் ஆதிரா 2 வெண் கல பதக்கமும், கலப்பு இரட்டையர் போட்டியில் அனன்யா வெண்கல பதக்கமும் என மொத்தம் 4 தேசிய பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவி களுக்கு ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் உட்பட பல்வேறு தரப்பினர் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரி வித்து வருகின்றனர்.

பசுந்தேயிலை விலை ரூ.15.46 என நிர்ணயம்

உதகை, ஜூலை 2- நீலகிரியில் பசுந்தேயிலை விலை கிலோவிற்கு ரூ.15.46 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. 65 ஆயிரம் விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து, தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலையை விநியோகித்து வருகின்றனர். அங்கு உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத் தூள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தேயிலை  விலையை மாதந்தோறும் விலை நிர்ணய கமிட்டி நிர்ணயித்து அறிவித்து வருகிறது. இதுகுறித்து தேயிலை வாரிய தென் மண்டல செயல் இயக்குநர் முத்துகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2021 ஆம் ஆண்டின் தேயிலை சந்தை கட்டுபாட்டு ஆணையின் பேரில், மாதந் தோறும் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு  வருகிறது. இதன்படி கடந்த ஜூன் மாத மாவட்ட சராசரி விலை யாக கிலோவுக்கு 15 ரூபாய் 46 பைசா என்று விலை நிர்ண யம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை கடந்த மாதம் நடைபெற்ற தேயிலை ஏலத்தில் கிடைக்கப்பெற்ற சிடிசி தேயிலைத்தூளின் விற்பனை விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்ட தாகும். மேற்கண்ட மாவட்ட சராசரி விலையை அனைத்து தேயிலை தொழிற்சாலைகளும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்: 211 பேர் மீது வழக்கு
உதகை, ஜூலை 2- கோத்தகிரி பகுதியில் போக்குவரத்து விதிமீறலில் ஈடு பட்ட 211 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய் வாளர் பதி தலைமையில், உதவி ஆய்வாளர் பிலிப் உள்ளிட்ட போலீசார் கோத்தகிரி - மேட்டுப்பாளையம், குன்னூர் செல்லும் சாலைகளில் வாகனத் தணிக்கை மேற்கொண்ட னர். இதில் மதுபோதையில் வாகனங்களை இயக்கிய 2 பேர் உட்பட ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டியும், பின்னால் அமர்ந்தும் சென்றவர்கள், சீட் பெல்ட் அணியாமல் சென்றவர்கள், அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியவர்கள் என போக்குவரத்து விதிமுறைகளை மீறிய தாக 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன், ரூ.74 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் உதவி ஆய்வா ளர் மனோகரன் உள்ளிட்ட போலீசார் மேற்கொண்ட சோதனை யில் போக்குவரத்து விதிகளை மீறிய 64 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ.65 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. மேலும், கோத்தகிரி உதவி ஆய்வாளர் பபிலா ஜாஸ் மின் கோத்தகிரி பகுதியில் மேற்கொண்ட வாகன சோதனை யில் போக்குவரத்து விதிகளை மீறிய 40 வாகன ஓட்டிக ளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதன்படி, சனியன்று ஒருநாளில் மட்டும் கோத்த கிரி பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறிய 211 பேர்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.1 லட்சத்து 89 ஆயி ரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

ஜேடர்பாளையம் தடுப்பணையிலிருந்து ராஜவாய்க்காலில் தண்ணீர் திறப்பு

நாமக்கல், ஜூலை 2- ஜேடர்பாளையம் தடுப்பணையிலிருந்து ராஜவாய்க் காலில் சனியன்று தண்ணீர் திறக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர் பாளையம் தடுப்பணையிலிருந்து ராஜவாய்க்காலுக்கு கடந்த ஜூன் 27 ஆம் தேதியன்று பொதுப்பணித்துறையினர் தண்ணீர் நிறுத்தம் செய்தனர். ராஜவாய்க்கால் பாசனத்தை நம்பி ஜேடர்பாளையம், ஆனங்கூர், பிலிக்கல்பாளையம், பொன்மலர்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பொத் தனூர், பரமத்திவேலூர், ஓலப்பாளையம், குச்சிபாளையம், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவ சாயிகள் வாழை, கரும்பு, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு, கோரை புல்லட் உள்ளிட்ட பணப்பயிர்களை சாகுபடி செய்து  வருகின்றனர். இந்நிலையில், ராஜவாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டதால், பயிர்கள் சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதனால், ராஜவாய்க்காலில் உடனடியாக தண்ணீர்  திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயி கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட நிர் வாகத்தின் உத்தரவின் பேரில், பொதுப்பணித்துறையினர்  ஜேடர்பாளையம் ராஜவாய்க்காலில் சனியன்று தண்ணீர்  திறந்துவிட்டனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த னர்.

பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, ஜூலை 2- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு 3,115 கிலோ பட்டுக்கூடு கொண்டு வரப்பட்டது. இதில் ஒரு  கிலோ பட்டுக்கூடு அதிகபட்ச மாக ரூ.492க்கும், குறைந்த பட்சமாக ரூ.241க்கும், சரா சரியாக ரூ.367.62க்கும் விற் பனையானது. மொத்தம் ரூ.11 லட்சத்து 45 ஆயிரத்து 339க்கு ஏலம் நடைபெற்றதாக ஏல அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

 


 

;