districts

img

கால்நடை மருத்துவமனை நேரத்தில் மாற்றம் செய்வது விவசாயிகளுக்கு பலனளிக்காது: த.வி.ச. ஆட்சேபம்

திருப்பூர், செப். 7 - தமிழகத்தில் கால்நடை மருத்துவ மனைகளின் நேரத்தை மாற்றம் செய் வது ஏழை, சிறு, குறு நடுத்தர விவசா யிகளுக்கு எந்த வகையிலும் பயன ளிக்காது என்று தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம் கூறியுள்ளது. இது தொடர்பாக கடந்த 6ஆம் தேதி  உடுமலைபேட்டையில் கால்நடை பரா மரிப்புத் துறை உதவி இயக்குநர் நடத் திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலை வர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பரமசிவம் ஆகியோர் பங்கெடுத்து கருத்துத் தெரி வித்தனர். அதன் விபரம் வருமாறு: தமிழ கத்தில் விவசாயிகள் குறிப்பாக சிறு,  குறு விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்களின் ஒரு பகுதி வாழ்வாதாரமாக  கால்நடை வளர்ப்பு இருந்து வருகிறது.  இவ்விவசாயிகள் தங்கள் நிலங்களில்  விவசாயப் பணிகள் மேற்கொள்வது டன், அருகாமை நிலங்களுக்கும் விவ சாயப் பணிக்குச் செல்கின்றனர். விவ சாயத் தொழிலாளர்கள் காலை 7  மணிக்கு சென்றுவிட்டு மதியம் 2  மணிக்கு வீடு திரும்புவர். இதன்  பிறகுதான் தாங்கள் வளர்க்கும் கால்ந டைகளைப் பராமரிக்கும் பணிகளைச் செய்வர். இந்நிலையில் கால்நடை மருத்துவ நிலையங்களின் காலை  8 மணி முதல் பிற்பகல் 2  மணி வரை வேலை நேரம் என நிர்ணயிப் பது எவ்வித பயனும் இல்லாததாக மாறி விடும்.

ஆய்வுப் பணிகள்,அவசர சிகிச்சை,  விரிவாக்கப் பணிகள், திட்டப் பணிகள்,  ஆய்வுக் கூட்டங்கள் ஆகியவற்றில் பங் கெடுக்க மருத்துவர்கள் சென்றாலும் அல்லது பராமரிப்பு உதவியாளர்கள், ஆய்வாளர்கள் சென்றாலும் மாலை 3  முதல் 5 மணி வரை யாராவது ஓரிருவர் சென்றாலும் மற்றவர்கள் மருத்துவம னையில் இருப்பது முதலுதவி சிகிச்சை  செய்யப் பயன்படும்.மதியம் 2 மணியு டன் வேலை நேரம் முடிந்தால், மறுநாள்  காலை 8 மணி வரை அதாவது 18 மணி  நேரம் இடைவெளியில் எவ்வித கால் நடை மருத்துவ சேவையும் கிடைக் காது. இது கால்நடை வளர்ப்போரை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும். கலப்பின கால்நடைகள் அதிகமாக உள்ள சூழ்நிலையில் நோய்த் தாக்குத லும் அடிக்கொரு முறை ஏற்படுகிறது. கலப்பின கால்நடைகளை கிடையிலே  கட்டி வளர்க்கும் நிலையில் மருத்துவ மனைக்கு அழைத்து வராமலேயே மருத்துவர்கள், ஊழியர்களை அழைத் துச் சென்று சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. அவசரத் தேவைக்கு  தற்போதே தனியார் மருத்துவர்களை நாடும் நிலையுடன், அதிக செலவு  செய்ய வேண்டியுள்ளது. எனவே தற்போது கால்நடை மருத் துவ நிலையங்களில் வேலை நாட்களில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை யும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையி லும், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்க ளில் காலை 8 மணி முதல் 12 மணி வரை யும் வேலை நேரமாக இருப்பதை எக் காரணம் கொண்டும் மாற்றக்  கூடாது. வேலை நேர மாற்றத்திற்காக  மிக அவசரம் என கருத்துக் கேட்பது  ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் அவ சரத் தேவைக்கு மருத்துவ வாகனங்கள்  போதுமான அளவு  இல்லை. எனவே உரிய கால அவகாசம் கொடுத்து கருத் துக் கேட்பு கூட்டங்கள் நடத்த வேண் டும் என்றும் வலியுறுத்தினர்.

;