கோவை, மே 14- அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வரும் நிலை யில், டீக்கடை ஒன்றின் அருகே இருந்த மரக்கிளை திடீரென முறிந்து கேபிள் வயர் கள் மீது விழுந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி மற்றும் பைபர் இணை யதள சேவை துண்டிக்கப்பட்டது. கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொக லூர், கரியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிக ளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகி றது. இந்த நிலையில் அன்னூர் சத்தி சாலை யில் உள்ள டீக்கடை ஒன்றின் முன்பு இருந்த மரத்தின் கிளை திடீரென முறிந்து சாலை யில் விழுந்தது. அப்போது சாலையில் வாக னங்கள் எதுவும் வராததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சாலை ஓரத் தில் இருந்த கேபிள் வயர்கள் மீது மரக் கிளை விழுந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் கேபிள் டிவி இணைப்பு மற்றும் பைபர் இணையதள சேவை பாதிப்புக்கு உள்ளானது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த உள்ளாட்சி நிர்வாக ஊழியர்கள் மரத்தின் கிளையை வெட்டி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்தநிலையில் டீக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மரத்தின் பிரம்மாண்ட கிளை முறிந்து திடீரென சாலையில் விழும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி கேமரா காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.