districts

img

தியாகி முத்து நினைவு தினம் அனுசரிப்பு

கோவை, ஜூலை 8- உப்பிலிபாளையம் தியாகி முத்துவின் 70ஆவது ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று அனு சரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கள் இணைந்து தியாகி முத்துவின்  நினைவிடத்தில் அஞ்சலி செலுத் தினர். கோவை கோத்தாரி மில் தொழி லாளியான முத்து உப்பிலியபா ளையத்தை சேர்ந்தவர். செங்கொடி  சங்கத்தில் தன்னை இணைத்துத் கொண்டு, பஞ்சாலை  தொழிலாளர் களின் உரிமைக்கான களப்போ ராளியாக திகழ்ந்தார். இது பஞ் சாலை முதலாளிகளுக்கு ஆத்தி ரத்தை ஏற்படுத்தியது. தொழிலா ளர்களுக்கு உரிமைகளை வழங்கு வதற்கு தயாரில்லாத நிலையில்,  உரிமைக்காக போராடும் போராளி களை பழி தீர்க்க முனைந்தது. இதன் தொடர்ச்சியாக, 1953 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பஞ்சாலை முத லாளிகள் அடியாட்களை ஏவி உப் பிலியபாளையம் தியாகி முத்துவை  

படுகொலை செய்தனர். தொழிலாளி வர்க்கத்திற்கான போராட்டத்தில் உயிர் நீத்த தியாகி  முத்துவின் நினைவு தினம், இடது சாரி கட்சிகளால் ஒவ்வொரு ஆண் டும் கடைபிடிக்கப்படுகிறது.  இதன்ஒருபகுதியாக, மார்க் சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி இணைந்து உப்பிலிய பாளையம் தியாகி முத்து நினைவு தினம் வெள்ளியன்று அனுசரிக்கப் பட்டது. முன்னதாக, தியாகி முத்து வின் மேடையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கொடியை, கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் ஏற்றிவைத்தார். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் கொடியை கட்சி யின் மாநில பொருளாளர்  எம்.ஆறு முகம் ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளின் ஊழியர்களும், தியாகி முத்துவின் மேடையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  இதனைத்தொடர்ந்து, நடை பெற்ற நினைவேந்தல் பொதுக்கூட் டத்திற்கு, சிபிஐ நிர்வாகி எம்.தங்க வேல் தலைமையேற்றார். மார்க் சிஸ்ட் கட்சியின் ஏ.தமிழ்ச்செல்வன்  வரவேற்றார். இதில், சிபிஎம்  மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன்,  சிபிஐ மாவட்ட செயலாளர் சி.சிவ சாமி ஆகியோர் உரையாற்றினார்.  இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்கை நகரக்குழு செயலாளர் வி.தெய் வேந்திரன், மார்க்சிய கல்வியாளர் எஸ்.பாலசந்திரன் உள்ளிட்ட நூற் றுக்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர். முடிவில், ஆர்.பழனிசாமி நன்றி கூறினார்.

;