districts

img

தியாகி சீரபாளையம் ராக்கியண்ணன் 67ஆவது நினைவேந்தல்

கோவை, ஜூலை 24- ஆதிக்கசாதியில் பிறந்து, ஒடுக் கப்பட்ட தலித் மக்களின் உரிமைக் காக போராடியதால், அதே ஆதிக்க சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தியாகி சீரபாளையம் ராக்கியண்ணன் 67 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடதுசாரி கட்சிகளால் அனுசரிக்கப்பட்டது. மதுக்கரை ஏசிசி சிமென்ட் ஆலை யில் சீரபாளையம் தியாகி ராக்கியண் ணன் பணிபுரிந்து வந்தார். செங்கொடி இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, உழைக்கும் மக்களின் உரி மைகளுக்காக போராடி வந்தார். இந் நிலையில், தமது பகுதியில் வசித்து வந்த தலித் மக்களை, ஆதிக்கசாதி யினர் ஒடுக்குவதை கண்டு அவர்க ளுக்காக குரல் கொடுத்தார். இதனை கண்டு ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியை சேர்ந்த நிலபிரபுக்களால் 1956 ஆம் ஆண்டு படுகொலை செய் யபட்டார்.

சாதி ஆதிக்கத்திற்கு எதி ராக, உழைக்கும் மக்களின் உரிமைக் கான போராட்டத்தில் உயிர் நீத்த சீர பாளையம் ராக்கியண்ணன் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும், மார்க் சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியினர் இனைந்து நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர். இதன்ஒருபகுதியாக 67 ஆண்டு நினைவுதினம் திங்களன்று அனு சரிக்கப்பட்டது.  சீரபாளையத்தில் உள்ள நினை விடத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு, விவசாய சங்க மதுக்கரை ஒன்றிய  கௌரவ தலைவர் கே.அய்யாசாமி தலைமை ஏற்றார். இதில், சிபிஐ மாநி லப் பொருளாளர் எம்.ஆறுமுகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில  துணைத்தலைவர் யு.கே.சிவஞா னம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழ னிச்சாமி, தெற்கு நகர செயலாளர் கே. நாகேந்திரன், மதுக்கரை ஒன்றிய செயலாளர் எம்.பஞ்சலிங்கம், விவ சாய சங்க மாவட்ட தலைவர் வி.பி. இளங்கோவன், விவசாய சங்க  பொறுப்பாளர் எஸ்.கருப்பையா, வி.ச. மதுக்கரை ஒன்றிய தலைவர் எம்.  மணியன், சிபிஐ மாவட்ட துணை செ யலாளர் ஜெ.ஜேம்ஸ் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். முடிவில் சிபிஎம் மதுக்கரை ஒன்றிய செயலா ளர் ஜி.பி.சக்திவேல் நன்றி கூறினார். முன்னதாக, தியாசி சீரபாளையம் ராக்கியண்ணன் நினைவிடத்தில் உள்ள சிபிஎம், சிபிஐ கட்சிகளின் கொடிகளை தலைவர்கள் ஏற்றி, புக ழஞ்சலியை செலுத்தினர்.