districts

img

இந்தியாவில் 67,245 குழந்தைகள் கடத்தல் வழக்குகள் மகாராஷ்டிரா, உ.பி.யில் அதிகரிப்பு

புதுதில்லி, செப்.4- 2021-ஆம் ஆண்டில், 12 முதல் 16 வய துக்குட்பட்ட 3,401 சிறுமிகள் கடத்தப் பட்டுள்ளனர். குறிப்பாக நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தை களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் என்று தேசிய குற்ற ஆவணக் காப்ப கத்தின்  அறிக்கை தெரிவிக்கிறது. . இந்தியாவில் மொத்தம் 67,245 குழந்தைகள் கடத்தல் மற்றும் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. இதில் மகாராஷ்டிரா 9,555 வழக்கு களுடன் முதலிடத்திலும், மத்தியப் பிரதேசம் (9,137). உத்தரப் பிரதேசம் (6,814) ஆகிய மாநிலங்கள் அடுத்த டுத்த இடத்தில் உள்ளன. 2021- ஆம் ஆண்டில் ஆறு வய துக்குட்பட்ட 114 பேர் கடத்தப்பட் டுள்ளனர். இதில் சிறுவர்கள் (66) சிறுமிகள் (48).   ஆறு வயது முதல் 16 வயதிற் குட்பட்டவர்களில்  827 பேர் சிறுவர்கள் 3,401 சிறுமிகள்.  16 முதல் 18 வயதுக் குட்பட்டவர்களில்  736 பேர் சிறுவர்கள் 4,222 பேர் சிறுமிகள். மூத்த குடிமக்கள் 11  பேரும் கடத்தப்பட்டுள்ளனர். கொலை செய்வதற்காக கடத்தல், ஆண் அல்லது பெண்ணை திருமணம் செய்வதற்காக கடத்தல்,  சிறுமிகளை கொத்தடிமைகளாக்குவதற்காக கடத்தல், குறிப்பாக பத்து வயதிற்குட் பட்டவர்கள் கடத்தப்பட்டு குழந்தை யில்லாதவர்களுக்கு விற்பது போன் றவை குழந்தைக் கடத்தலுக்கான பிர தான காரணங்கள் எனக் கண்டறி யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் குழந்தைக ளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (போக்சோ) சட்டத்தின் கீழ் மொத்தம் 6,219 குற்றங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. மாநிலத்தில் 3,480 சிறுமி கள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளனர். 2,454 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட் டுள்ளனர்.  16 சிறுமிகள் ஆபாசப் படங்க ளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள் ளனர், இரண்டு சிறுமிகள் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.