districts

img

குன்னூர் 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து

உதகை, செப்.30- உதகைக்கு சுற்றுலா வந்த பேருந்து குன்னூர் அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்,  பேருந்தில் பயணம் செய்த 6 பேர் பலியான சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிலர் படுகாயம டைந்துள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு, தென்காசி   கடையம் பகுதி யிலிருந்து உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.  உதகையை பார்த்து விட்டு, சொந்த ஊருக்கு செல்லும் போது குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சாரல் மழை  மற்றும்  மேகமூட்டமாக இருந்துள்ளது. இதனால், பேருந்தை  இயக்க ஓட்டுநர் திணறியுள்ளதாக தெரிகிறது. இந்நிலை யில், சுற்றுலா பேருந்து மரப்பாலம் அருகே சென்று கொண்டி ருந்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து  சுமார் 100 அடி  பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 6 பேர் பலியாகி  உள்ளனர். மேலும் 30 க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந் துள்ளனர். மேலும், சிலர் விபத்தில் சிக்கியுள்ள நிலையில் அவர்களை  மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த அனைவ ரையும் மீட்டு  குன்னூர்  அரசு மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள்  அனைவரும் தென்காசி  கடையம் பகுதியை சார்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.