ஈரோடு, செப்.12- உயர்வுக்குப் படி நிகழ்ச்சியின் மூலம் 43 மாணவ, மாணவியர்கள் உயர் படிப்பிற்காக கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இம்முகாமை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட் டரங்கில் புதனன்று உயர்விற்குப் படி நிகழ்ச்சி நடைபெற்றது. 2022-23 மற்றும் 2023-24ம் கல்வியாண்டில் உயர்கல்வி தொடராத 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர் கள் உயர்கல்வி தொடர்வதற்கு ஏதுவாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் மூலம் 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்கள் மற்றும் உயர் கல் விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்க ளுக்கு வழிகாட்டும் வகையில் நடைபெற் றது. இந்நிகழ்வில், கல்விக் கடனுக்காக விண் ணப்பித்த 180 மாணவ, மாணவியர்கள் நேரடி சரிபார்ப்புக்காக கலந்து கொண்டனர். அதில் 20 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.50 லட்சம் கல்வி கடன் வழங்கப்பட்டது. 10 மாணவ, மாணவியர்கள் கல்வி கடனுக்காக இணை யத்தில் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப் பிக்க தவறியவர்கள், மருத்துவம், பொறியி யல், இதர தொழில் படிப்புகள், கலை, அறி வியல் படிப்புகளுக்கு கல்விக்கடன் பெறுவ தற்கு http://www.vidyalakshmi.co.in/ மற்றும் Jansamarth.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, முதன்மை கல்வி அலுவலர் டி.சம்பத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.