districts

img

3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

தருமபுரி, பிப்.27- பென்னாகரம் அருகே கற் காலத்தைச் சேர்ந்த சுமார் 3000  ஆண்டுகள் பழமையான பாறை  ஓவியம் கண்டெடுக்கப்பட்டுள் ளது. தருமபுரி மாவட்டம் முழுக்க வர லாற்றுச் சின்னங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவற்றில் ஏற் கனவே ஆவணப்படுத்தப்பட்ட வர லாற்றுச் சின்னங்களும் உள்ளன. இதுவரை கண்டறியப்படாத கவ னம் பெறாத வரலாற்றுச் சின்னங் களும் உள்ளன. பென்னாகரம் பகு தியில் கவனம் பெறாத வரலாற்று சின்னங்களை கண்டறிந்து ஆவ ணப்படுத்தும் பணிகளில் ‘பென்னா கரம் வரலாற்று மையம்’ என்ற அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த  அமைப்பில் அரசுப்பள்ளி ஆசிரி யர்கள், வரலாற்று ஆர்வலர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலை யில், பென்னாகரம் ஒன்றியம், மஞ் சநாயக்கனஅள்ளி பகுதியில் பெரும் கற்கால ஈமச்சின்னங்கள், பாறை ஓவியங்கள் இருப்பதாக இந்த அமைப்புக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில் பென்னாகரம்  வரலாறு மையம் ஒருங்கிணைப்பா ளர்கள் பெருமாள், சந்தோஷ் குமார், முதுகலை ஆசிரியர் முரு கன் ஆகியோர் அப்பகுதிகளில் கள  ஆய்வு மேற்கொண்டனர். அப் போது, கல்குத்து மேடு என்ற இடத் தில் பெரும் கற்கால ஈமச்சின்னங் கள் மற்றும் பாறை ஓவியம் இருப் பது தெரியவந்தது. இந்த ஓவியமா னது சமவெளியில் உள்ள சிறிய கற் பாறையின் மீது கற்கீரல் ஓவியமாக  செதுக்கப்பட்டுள்ளது. இந்த பாறை ஓவியங்கள் குறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறுகையில், புதிய கற்காலத்தைச் சார்ந்த இந்த கற்கீ ரல் ஓவியம் 3 ஆயிரம் முதல் 4 ஆயி ரம் ஆண்டுகளுக்கு முந்தைய  காலத்தில் வரையப்பட்டிருக்க லாம். யானை மற்றும் மாட்டின் உரு வம் இந்த ஓவியத்தில் காணப்படு கிறது. உருவங்கள் நேர்த்தியான  உடலமைப்புடன் உருவாக்கப் பட்டுள்ளது. 12 x 40 செ.மீ. அளவில்  இந்த ஓவியம் உள்ளது. ஒவ்வொரு  ஓவியமும் 12 x 20 என்ற அளவில் சம மாக பிரிக்கப்பட்டிருக்கிறது. யானை மட்டும் காணப்படும் இந்த  ஓவியம் அரிதான ஒன்றாகும். இப் பகுதியில் காட்டு மாடுகள் மற்றும்  யானைகள், மனிதர்களை அச் சுறுத்தும் வகையில் இருந்திருக் கலாம். இப்பகுதியில் இது போன்ற  விலங்குகள் இருப்பதை உணர்த்து  எச்சரிக்கையுடன் செல்வதற்கு இந்த ஓவியங்கள் வரையப்பட்டி ருக்கலாம், என்றார். மேலும், இப் பகுதி அமைந்துள்ள இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் பெருங்கற் காலத்தைச் சேர்ந்த கல் ஆயுதங் கள் குத்துக்கல், கல் திட்டை, கல் வட்டங்கள், கல் ஆயுதங்கள் உரு வாக்கிய இடங்கள் உள்ளது, என் பது குறிப்பிடத்தக்கது.