districts

img

பாடாய்படுத்தும் பத்து ரூபாய் நாணயம்!

கோவை, ஜூலை 6- கோவை உள்ளிட்ட பல் வேறு மாவட்டங்களில் பத்து ரூபாய் நாணயத்தை வணிக நிறுவனங்கள் வாங்க  மறுத்து வருவது தொடர் கிறது என பொதுமக்கள் குற் றஞ்சாட்டியுள்ளனர். கோவை மாவட்டத்திலுள்ள கடைகள், தனியார் மற்றும் அரசு பேருந் துகள், வணிக நிறுவனங்கள் என எங்கும் பத்து ரூபாய்  நாணயம் வாங்குவதில்லை. அதற்கு அவர்கள் கூறும் கார ணம் பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயம் எங்களிடமிருந்து வாங்க மறுக்கிறார்கள் என்பதாகும். பெரும்பாலான மக்க ளும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்கவும், வைத்திருக்க வும் மறுக்கிறார்கள் என்பது உண்மையே. இது படித்தவர் கள் மத்தியிலும் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இதே  பிரச்சனை உள்ளது. தொடரும் இப்பிரச்சனை சம்மந்தமாக சில மாதங்களுக்கு முன்னர் பொதுமக்களிடம் பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவுறுத்தபட்டது. ஆனாலும், பிரச்சனை தீர்ந்தபா டில்லை. வெளியூரிலிருந்து கோவை வரும் மக்கள் தங்களி டம் இருக்கும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதை கேள்வி கேட்டு, கடைகளிலும் பேருந்துகளில் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்வது நடக்கிறது. இதுசம்மந்தமாக புகார் கள் தந்தும் பலனில்லை என கோவை வரும் வெளியூர் மக் கள் கூறுகின்றனர். 10 ரூபாய் நாணயங்கள் பற்றி சந்தேகத்துடன் வரும் மக்க ளுக்கு புரிய வைக்க வேண்டும். அரசு அங்கீகரித்த நாண யத்தை மறுப்பது சட்டப்படி குற்றமாகும். இப்பிரச்சைனை சம் மந்தமாக பொதுமக்களிடம் விரிவான விழிப்புணர்வை ஏற்ப டுத்த வேண்டும். குறிப்பாக, பேருந்து நடத்துநர்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் சில்லரை வணிக நிறுவனங்கள் எந்த  காரணத்தை கூறியும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக் கக்கூடாது. இதனோடு நாணயத்தை வாங்க மறுப்போர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை கள் மூலம் நீண்டகால பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக் கப்படும்.

;