districts

ரூ.1.5 கோடி கொள்ளை என பாஜக பிரமுகர் நாடகம்

கோயம்புத்தூர், மே 20- 18.5 லட்சம் ரூபாய் கொள்ளை போன நிலையில், ரூபாய் 1.50 கோடி கொள்ளை போனதாக பொய்ப்புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது இரு பிரிவுகளில் போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த சொக்கம்பாளை யம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். பாஜக பிரமுக ரான இவர், அதே பகுதியில் வாகனங்களை சுத்தம் செய்  யும் ‘ஒர்க் ஷாப்’ ஒன்றை நடத்தி வருகிறார். இவரது வீட்டில்  கடந்த மே 18 அன்று பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும்  தங்க நகைகள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது. 

இதுபற்றி பாஜக பிரமுகர் விஜயகுமார் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், பணப்  பெட்டியில் இருந்த ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கப் பணம்  மற்றும் 9 சவரன் தங்க நகைகள் கொள்ளை போய் விட்ட தாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து 8 தனிப்படைகள் அமைத்து, சிசிடிவி  காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்திய  போலீசார், 24 மணி நேரத்திற்குள் கருமத்தம்பட்டி பகுதி யில் பதுங்கியிருந்த திருவாரூரைச் சேர்ந்த அன்பரசன் என்பவரைக் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்  மீது 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவை யில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்த நபர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்த பணம் 18.50 லட்சம் ரூபாய் மற்றும் 9 சவரன் நகைகள் மட்டுமே என்றும்,  ஆனால், பாஜக பிரமுகர் விஜயகுமார் 1 கோடியே 50 லட்சம் என பொய் கூறி மோசடி செய்ய முயன்றதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பாஜக பிரமுகர் விஜயகுமார் மீது 2  பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

;