districts

தோல்வி பயத்தில் பாஜக சட்டமீறல்

தோல்வி பயத்தில் பாஜக சட்டமீறல் கோபி, ஏப்.8- தேர்தல் நிலைக்கண்காணிப்புக்குழு அதிகாரிகளை கட மையை செய்ய விடாமால் மிரட்டிய பாஜக வேட்பாளரின் செயல் அத்துமீறிய செயலாகும் என திருப்பூர் நாடாளு மன்ற திமுக கூட்டணி வேட்பாளர் கே.சுப்பராயன் தெரி வித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே திருப்பூர் நாடாளு மன்ற திமுக கூட்டணி வேட்பாளர் கே.சுப்பராயன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். இதில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பி னர் ஏ.ஜி.வெங்கடாசலம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு திறந்த வேனில் வாக்காளர்களை சந்தித்து கதிர்அரிவாள் சின்னத்தில் ஆதரவுகோரி வாக்குசேகரித்தனர். அப்போது வாக்கு சேகரித்து கே.சுப்பராயன் பேசுகையில், இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக திருட்டு கும்பல் முயற்சிக் கிறது. இவர்களை மக்கள் முன் தோலுரித்து காட்ட வேண் டும். சர்வ நிச்சயமாக இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மோடி அரசு மண்ணை கவ்வப்போகிறது, என்றார்.  இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் சுப்பராயன் பேசுகையில், அதிமுக - பாஜக வேட்பாளர்கள் மீது விதி மீறல் வழக்குகள் பதிவு செய்வது குறித்த கேட்டபோது இரண்டு விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியுள்ளது. ஒன்று அதிமுக - பாஜக கட்சியினர் தோல்வி பயத்தால் சட்ட மீறல்களில் ஈடு படுகின்றனர். இரண்டாவதாக அதிமுக - பாஜக இருகட்சி யினரும் சட்ட எல்லைக்குள் நின்று அரசியல் செய்பவர்கள் அல்ல சட்டத்தை மீறுவது இருகட்சியினருக்கும் இயல்பு இத னால் இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர், என் றார். இந்த வாக்குசேகரிப்பின்போது, கோபி வடக்கு ஒன்றியச் செயலாளர் ரவீந்திரன், கூகலூர் பேரூர் கழகச் செயலாளர் ராஜா ராம், பேரூராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி, அம்மாபாளை யம் ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதி ராஜசேகர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனுசாமி, சிபிஐ கனகராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.