districts

img

கும்பகோணத்தில் புதிய காவல் ரோந்து வாகனங்கள்

கும்பகோணம், ஜூன் 6- கும்பகோணம் மாநகரத்தில் குற்றத் தடுப்பிற்காகவும், போக்குவரத்து நெரி சலை தவிர்க்கவும் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு. வழிகாட்டுத லுக்காகவும் தி டெல்டா கப் பைக் பட்ரோல்  (THE DELTA COP BIKE PATROL) என்ற  புதிய காவல் இருசக்கர ரோந்து வாகனம் துவங்கப்பட்டுள்ளது.

 கும்பகோணம் மகாமககுளம் அண்ணா சிலை அருகில்  தஞ்சை மாவட்ட ஆட்சியர்  தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.  கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் கு. கீர்த்திவாசன், மற்றும் காவல் அதிகாரி கள், காவலர்கள், பொதுமக்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.  கும்பகோணம் மாநகரத்தில் 5 காவல் இருசக்கர ரோந்து வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கும்பகோணம் உட்கோட்ட முகாம் அலுவலக கட்டுப் பாட்டில் இயங்கும் இந்த இருசக்கா ரோந்து வாகனங்கள் குற்றச்சம்பவங்கள், விபத்துக்கள், முதலுதவி தேவைப்படும் இடங்களில் உடனுக்குடன் செல்லும் வகையிலும்  செட்டிமண்டபம் முதல் தாரா சுரம் வரையிலான தஞ்சாவூர் பிரதான சாலை மற்றும் மாநகர பகுதி முழுவதும் முக்கிய சாலைகளில் செயல்பட உள்ளது.  ஒவ்வொரு ரோந்து வாகனத்திற் கும் இரண்டு காவலர்கள் பிரத்யேக உடை அணிந்து ரோந்துப் பணியில் ஈடுபடு வார்கள்.

 பிரதான சாலைகளில் காவல் துறையினரின் ரோந்து பணியை அதிகரிக்கும் பொருட்டு துவக்கப்பட்டுள்ள இந்த ரோந்து வாகனத்தில் பெண் காவ லர்கள் அடங்கிய ஒரு ரோந்து வாகன மும் ஈடுபட உள்ளது என்பது  குறிப்பி டத்தக்கது.

;