districts

img

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் காது கேளாமைக்கான அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

 கள்ளக்குறிச்சி ஜுன் 15- கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் காது கேளாமைக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து  சாதனை படைத்துள்ளதாக மாவட்ட ஆட்சி யர் ஷ்ரவன்குமார் தகவல் தெரிவித் துள்ளார்.

சின்னசேலம் வட்டம், மாத்தூர் கிராமத் தைச் சேர்ந்த 3 வயது ஆண் குழந்தையின் பெற்றோர் தங்களது குழந்தை கேட்கும் திறனை இழந்துவிட்டதாக கடந்த 2 மாதங் களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துவந்தனர்.

இது குறித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காது, மூக்கு,தொண்டை பிரிவு மருத்துவர்கள் குழந்தைக்கு காது கேளாமைக்கான சிறப்பு பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனைக்குப்  பின்னர் சம்பந்தப்பட்ட குழந்தைக்கு பிறவி  காது கேளாமை உறுதி  செய்யப்பட்டு மருத்துவமனையில்  அறுவை  சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இக்குழந்தைக்கு  காது  கேளாமைக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.தனியார் மருத்துவமனையில் ரூ.10 லட்சம் வரை செலவாகும் இந்த அறுவை சிகிச்சையினை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக வெற்றிகரமாக செய்து மருத்துவர்கள் சாதனைப்படைத்துள்ளனர்.

மேலும் பிறவி காது  கேளாமைக்கான  அறுவை சிகிச்சை சென்னை, மதுரை,  கோவை போன்ற மாநகரங்களில் மட்டுமே செய்யக்கூடிய இந்த அறுவை சிகிச்சை முதன்முறையாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்து சாதனை படைக்கப் பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கருத்தரங்கத்தில். மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) நேரு,  கண்காணிப்பாளர் பழமலை, துணை  முதல்வர் ஷமீம்,  பேராசிரியர்கள் அந்தோனி  இருதய ராஜன். விஜய கிருஷ்ணன்.சங்கர  சுப்ரமணியன், குடிமை மருத்துவர் பொற்செல்வி முத்துக்குமார், மயக்கவியல் துறை பேராசிரியர் ஹாஜா ஷெரீப், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் கள்ளக் குறிச்சி மூத்த உறுப்பினர் ஷண்முகசுந்தரம், மாவட்ட திட்ட அலுவலர் சுவாமிநாதன் மற்றும் பல்துறை சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

ரத்த பந்த திருமணங்களை தவிர்ப்பீர்

முன்னதாக பிறவி காது கேளாமை  தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய பிறவி காது கேளாமைக்கான அறுவை சிகிச்சை நிபுணர் மோகன், பிறவி காது கேளாமைக்கு மிக முக்கிய காரணமாக திகழ்வது ரத்த சொந்தங்களில் திருமணம் செய்வது தான். எனவே அத்தகைய திருமணத்தை தவிர்க்க வேண்டுமென்று கூறினர்.