கரூர், ஜூலை 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில், மாவட்டம் முழுவ தும் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக் கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சந்தா சேர்ப்பு இயக்கத்தில் கட்சியின் மாநி லக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாவட்ட செயற் குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், கரூர் மாநகரம் - 18 ஆண்டுச் சந்தா, கரூர் ஒன்றியம் - 5 ஆண்டுச் சந்தா, ஒரு ஆறு மாதச் சந்தா, க.பரமத்தி - 2 ஆறு மாதச் சந்தா, அரவக்குறிச்சி - 5 (4 ஓராண்டு, ஒரு 6 மாதச் சந்தா), கடவூர் - 2 ஆண்டுச் சந்தா, கிருஷ்ணராயபுரம் - 2 (ஒரு ஓராண்டு, ஒரு 6 மாதச் சந்தா), தோகைமலை - 7 (6 ஓராண்டு, ஒரு 6 மாதச் சந்தா) என மொத்தம் 36 ஆண்டுச் சந்தாக்கள், 5 ஆறு மாதச் சந்தாக்கள் பெறப் பட்டன.