districts

தோழர் ஏ.ரெங்கராஜன் காலமானார்

கரூர், அக்.19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு முன்னாள் உறுப்பினர் ஏ.ரெங்கராஜன் உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலை அவரது இல்லத்தில் காலமானார்.  கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பிள்ளாபாளையம் அருகில் உள்ள வீரக்குமரன்பட்டியை சேர்ந்தவர் தோழர் ஏ.ரெங்கராஜன். இவர் 1996 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு உறுப்பினர், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் முழு நேர ஊழியராக பணியாற்றியுள்ளார். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள கிராமப்புற மக்களின் பிரச்சனைகளுக்காக மட்டுமின்றி கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள், தொழிலாளர்களுக்காக பல கட்ட போராட்டங்களை நடத்தி, கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளார்.  இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் புதனன்று உயிரிழந்தார். அன்னாரது இறுதி ஊர்வலம், வியாழக்கிழமை காலை அவரது சொந்த ஊரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.