districts

img

கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் படுகொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கரூர், செப்.12 - கரூர் மாவட்டம் புகளூர்  வட்டம் க.பரமத்தி ஒன்றியத் திற்கு உட்பட்ட குப்பம் கிரா மத்தில் அனுமதியின்றி செயல் பட்டு வந்த அன்னை கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கல் குவாரி எதிர்ப்பு செயல்பாட்டாளர் ஜெகநாதன் புகார் தெரி வித்த நிலையில், கனிம வளத்துறை இணை இயக்கு நர் ஜெயபால் மூலம் கடந்த  செப்.9 அன்று குவாரி மூடப் பட்டது.  இதனால் ஆத்திர மடைந்த அன்னை கல் குவாரி உரிமையாளர் செல்வ குமார், தன்னுடைய வாக னத்தை ஜெகநாதன் மீது  ஏற்றி படுகொலை செய்துள்ளார். கொலை யாளி செல்வகுமார் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது உரிய புலன் விசா ரணை நடத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.  பலியான ஜெகநாதன் குடும் பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். அவரது குடும்ப உறுப்பி னர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியு றுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் க.பரமத்தி ஒன்றியக்குழு சார்பில், க.பரமத்தி கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.ஆர்.ராமசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, செயற்குழு உறுப்பினர் கே.கந்தசாமி ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.  மாவட்டக் குழு  உறுப்பினர்கள் கே. சண்முகம், எஸ்.பி.ஜீவா னந்தம், ஆர்.ஹோச்சுமின், கரூர் மாநகர செயலாளர் எம்.தண்டபாணி, கரூர் ஒன்றிய செயலாளர் எம்.ராஜேந்திரன், க.பரமத்தி ஒன்றியக்குழு உறுப்பினர் ப. சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;