districts

img

திருப்பாதிரிப்புலியூரில் ரயிலை மறித்து போராட்டம்

கடலூர், செப். 13- திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலை யத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல  வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தை கடலூர் திருப்பாப்புலியூர் என பெயர்  மாற்றம் செய்த மாநகராட்சி தீர்மானத்தை  அமலாக்க வேண்டும். கொேரானா பொது  முடக்கத்திற்கு பிறகு மன்னார்குடி, காரைக் கால் விரைவு ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனால் சென்னை செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். ஆகவே, மீண்டும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று  செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம்,  உழவன், திருப்பதி ஆகிய  எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும், கன்னியாகுமரி, புதுச்சேரி மஹால் எக்ஸ்பிரஸ், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்ல வேண்டும்.  சேலம்-விருதாச்சலம் விரைவு ரயில், மயி லாடுதுறை- கோவை ஜனசதாப்தி விரைவு ரயில், மயிலாடுதுறை- மைசூருக்கு விரைவு  ரயில், விழுப்புரம்-தாம்பரம் பாசஞ்சர் ரயில்கள் அனைத்தும் கடலூர் துறைமுக சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்திற்கு மேல்கூரை அமைக்கவேண்டும், குடிநீர், கழிப்பறை, பயணிகள் தங்கும் அறை, மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் எளிதாக வந்து செல்வதற்குரிய அனைத்து  வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பில் செவ்வாயன்று (செப்.13) ரயில் மறியல் நடைபெற்றது.

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செற் குழு உறுப்பினர் வி.சுப்புராயன், பி.கருப்பை யன், ஜெ.ராஜேஷ்கண்ணன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான், குடியி ருப்போர் சங்க பொதுச் செயலாளர் எம்.மருதவாணன், தலைவர் பி.வெங்கடேசன். திமுக மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா,  காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் ஏ.எஸ்.சந்திரசேகரன், வி.குளோப், நாகராஜன் (சிபிஐ), பா.தாமரைச்செல்வன் (விசிக), தென்.சிவக்குமார் (திராவிடர் கழகம்), பாலு (மக்கள் அதிகாரம்), ஷேக் மதரஸா (இந்திய  யூனியன் முஸ்லிம் லீக்) உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜவான்ஸ் பவான் அருகில் இருந்து திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலை யம் வரை பேரணியாக வந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர்.

;