districts

img

சிதம்பரம் அருகே விதிகளை மீறி சவுடு, ஊற்று மணல் கொள்ளை

சிதம்பரம், செப். 15- கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் அருகே கொத்தட்டை, வேளங்கிபட்டு, அத்தி யாநல்லூர். மணிகொல்லை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இயற்கையாகவே சவுடு  மண்ணை விளை நிலங்க ளில் சமதளத்தில் மேடுக ளாக உள்ளது.  இந்த பகுதிகளில் விவசாயிகள் மணிலா, சவுக்கை, பூச்செடி கள், முருங்கை, முந்திரி, கம்பு, எள், கத்தரி, வெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆற்று  மணலின் விலை அதிகரித் தையடுத்து, அந்த பகுதி யில் உள்ள சிலர் புவியி யல் துறையில் அனுமதி பெற்று சில மேடான விலை  நிலங்களில் இருந்து சவுடு  மண்ணை எடுத்து விற்பனை  செய்து வருகின்றனர். தற்போது சென்னை உள்ளிட்ட பெரு நகரங்க ளுக்கு ஒரு லாரி மண் 50  ஆயிரம் ரூபாய் வரை  விற்பனை செய்யப்படு கிறது. ஆனால் ஒரு அனு மதியை மட்டும் வைத்துக் கொண்டு, நிலத்தில் அனு மதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்திலும்,  அனு மதிக்கப்பட்ட இடத்தை தாண்டி மற்ற இடங்களிலும் மண் எடுக்கப்படுகிறது. இதனால் விவசாய நிலங் கள் வீணாவதோடு, கடல் நீரும் உட்புகும் அபாயம் உள்ளது. மேலும் இரவு பகல் பாராமல் தினசரி 100 முதல் 200 லாரிகள் தொடர்ந்து மண்ணை அள்ளிச் செல்வ தால் அப்பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியு மாக மாறிவிட்டதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பல்முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து மணிக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்தி ரன் கூறுகையில், “சவுடு மண்ணை 6 அடிக்கு கீழே எடுக்கக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், 30 அடி ஆழத்திற்கு எடுக்கிறார்கள்” என்றார். 10 அடி முதல் 30 அடி  வரை ஊற்று மண் இருக்கும்.  இதில் நீர் வளம் சேமிக்கப் பட்டு இருக்கும். இது ஆற்று மண் போல உள்ளதால் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பதத்தில் இருக்கும். இந்த சேறும் சகதியுமான மண்ணை எடுத்து காயவைத்து பிறகு விற்பனை செய்கிறார்கள். ஊற்று மண்ணை வெளியே எடுத்து விட்டால் கடல் நீர்  நிலத்திற்குள் புகுந்து நிலங் கள் அனைத்தும் உப்பு நீராக  மாறிடும். எனவே இந்த பகுதி யில் சவுடு மண் எடுக்க அரசு  அனுமதி வழங்கக் கூடாது என்றார்.

;