சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் சங்கர், நான் முனிசிபல் ஊராட்சி மன்றத் தலைவர் பத்மசுந்தரி உமாநாத் ஆகியோர் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் குகநாதன், ஒன்றியக் கவுன்சிலர் பாலமுருகன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் பரந்தாமன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராதாகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.