districts

img

அடாவடி வட்டி வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள்: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

கடலூர், செப். 7- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாடு செப்டம்பர் 29, 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் கடலூ ரில் நடைபெற உள்ளது. அதையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பெண்களுக் கான கருத்தரங்கம் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சமம் பெண்கள் அமைப்புடன் இணைந்து நெய்வேலியில் கருத்தரங்கம் நடை பெற்றது. மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.மாதவி தலைமை தாங்கி னார். சமம் இணை ஒருங்கி ணைப்பாளர் ஜெய பிர கதி வரவேற்றார் "நுண் நிதி நிறுவனங்களில் பெண்க ளின் பங்கு" என்ற தலைப்பில் மாதர் சங்க த்தின் மாநில துணைச் செய லாளர் எஸ்.டி.சங்கரியும், "கூட்டுறவு - கடன் உறவு" என்ற தலைப்பில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, “கடன் வலையில் நாட்டுப்புற பெண் கலைஞர்கள்” என்ற தலைப்பில் மாற்று ஊடக மைய மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஜி.குணாளன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செய லாளர் ஆர்.தாமோ தரன், மாவட்டத்தலைவர் எஸ்.பாலகுருநாதன்,  மாதர் சங்கத்தின் மாநில செயற் குழு உறுப்பினர் வி.மேரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சமம் கலைக்குழு தலைவர்  பி.கண்ணகி நன்றி கூறினார். பெண்கள் நடத்தும் சுய உதவி குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும், தனியார் நிறுவனங்களின் அடாவடி வட்டி வசூலை தடுக்க அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டது. வரும் செப்டம்பர் 11ஆம் தேதி மகா கவி பாரதியார் பிறந்த நாளில் மாவட்டத்தில் 10 இடஙகளில் சமம் முல்லை குழுவை துவக்கு வது என்றும் முடிவு செய்யப் பட்டது.

;