கடலூர், அக்.11- கோரிக்கைகளை வலி யுறுத்தி நெய்வேலி என்எல்சி தொழிலாளர் ஊழி யர் (சிஐடியு) சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஒருங்கிணைக்கப்பட்ட ஊக்க ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டதில் 10 விழுக்காடு பாக்கி தொகையை தீபாவளிக்கு முன்னதாக வழங்க வேண்டும். புதிய அனல் மின் நிலையம் தொடங்கப்பட்டதற்கு தலா பத்தாயிரம் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. சிஐடியு பொருளாளர் எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார். தலைவர் டி.ஜெயராமன், பொதுச் செயலாளர் எஸ். திருஅரசு, மாநிலக் குழு உறுப்பினர் எ.வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெய்வேலி நகரச் செய லாளர் ஆர்.பாலமுருகன், சிஐடியு நிர்வாகிகள் திருவேங்கடம், சந்திரன், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.