ஈரோடு, பிப்.24-
மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கத்தினர் இரண்டாவது நாளாக அரசு அலு வலகங்களில் குடியேறும் போராட் டத்தில் ஈடுபட்டனர். தெலுங்கானா, புதுச்சேரி உள் ளிட்ட மாநிலங்களில் மாற்றுத்திற னாளிகளுக்கு மாதந்திர உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கப் படுவதைப் போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும். கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறை பணிகளில் குறைந்தபட்சம் 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான நலச் சங்கத்தினர் இரண்டாவது நாளாக அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு நகரம், அந்தியூர், பவானி, சத்திய மங்கலம், பவானிசாகர், மொடக் குறிச்சி, புஞ்சை புளியம்பட்டி ஆகிய பகுதியில் உள்ள அரசு அலுவல கங்களில் குடியேறும் போராட் டம் நடைபெற்றது. இதில், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செய லாளர் டி.சுப்பிரமணி, மாவட்ட உத வித் தலைவர்கள் ராஜூ, ப.மாரி முத்து, ஏ.பி.ராஜூ, சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் என்.முருகையா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும், பாது காப்பாளர்களும் கலந்து கொண்ட னர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரகம், அரூர், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக் கரவர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, மாவட்டச் செயலா ளர் கே.ஜி.கரூரான், இந்திய மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் நா. தமிழமுதன், வாலிபர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சி.வேலாயுதம், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.மாரிமுத்து, விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டப் பொருளாளர் இ.கே.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற குடி யேறும் போராட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.கே.வெங்கடாசலம், சிஐடியு மாவட்ட செயலாளர் டி. உதயகுமார், மாவட்டப் பொருளா ளர் பி.ஹரிகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் எம்.கனகராஜ், மாவட்ட உதவித் தலைவர் பாரதி, காளிதாஸ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். இதையடுத்து சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதா கினர். திருப்பூர் திருப்பூர் ஆட்சியரகம் எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிறுத்த நிழற்குடையில் அமர்ந்து போரா டிய மாற்றுத் திறனாளிகள் செவ் வாய்க்கிழமை இரவும் அங்கிருந்து கலைந்து செல்லாமல் போராட் டத்தை தொடர்ந்தனர். இந்நிலை யில் புதனன்று மாநில அளவில் மறி யல் போராட்டம் நடத்துவது என மாநிலத் தலைமை அறிவித்த முடி வுப்படி, திருப்பூர் மாவட்ட ஆட்சி யரகம் எதிரே பல்லடம் சாலையில் அவர்கள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பா. ராஜேஷ், பொருளாளர் ஆர்.காளி யப்பன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு கைதாகினர்.