கோபி, ஜூன் 11- அரசுப்பள்ளியில் படித்து பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பி னர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு மாணவ, மாணவி களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக, கடந்த மாதம் வெளியான 10,11,12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் பாராட்டு விழா நடை பெற்றது.
இதில் +2 பொதுதேர்வில் ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளிலேயே 600க்கு 585 மதிப்பெண் பெற்று முத லிடம் பிடித்த ரிதன்யா, 600க்கு 578 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்த மோகனபிரியா மற்றும் மூன்றா மிடம் பிடித்த தாரணி ஆகிய மூன்று மாணவிகளுக்கும் ஊக்க படுத்திய பெற்றோர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் பாராட்டி பதக்கங்கள் அணிவித்து பரிசு களை வழங்கினார்.