districts

img

ஈரோடு தொகுதியில் கே.இ.பிரகாஷ் அமோக வெற்றி

ஈரோடு, ஜூன் 5- ஈரோடு நாடாளுமன்ற தொகுதி யில் போட்டியிட்ட திமுக வேட்பா ளர் கே.இ.பிரகாஷ் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி யில் இந்தியா கூட்டணியின் திமுக சார்பில் கே.இ.பிரகாஷ், அதிமுக சார்பில் அசோக்குமார், பாஜக கூட்டணியின் தமாக சார்பில் விஜய குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்மேகம் மற்றும் சுயேட்சைகள் ஆகியோர் போட்டியிட்டனர். வாக் குப்பதிவான இயந்திரங்கள் சித் தோடு அருகே உள்ள ஈரோடு அரசி னர் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு செவ்வாயன்று எண் ணப்பட்டது. முதல் சுற்றிலேயே கே.இ.பிரகாஷ் எதிர்த்து போட்டி யிட்ட அதிமுக வேட்பாளர் அசோக்கு மாரை விட 12 ஆயிரத்து 786 வாக்கு கள் பெற்றார்.

தொடர்ந்து 14 மேசை களில் 23 சுற்று வாக்கு எண்ணிக் கை நடைபெற்றது. அனைத்து சுற்றுக ளின் முடிவிலும் பிரகாஷ் தொடர்ந்து முன்னிலை வகித்தார். இறுதி சுற்றின் முடிவில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 840 வாக்குகள் பெற்று பிரகாஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டார். அதிமுக வேட்பாளர் 3 லட்சத்து 23 ஆயிரத்து 751 வாக்கு கள் மட்டும் பெற்று தோல்விய டைந்தார். வாக்கு வித்தியாசம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 98 ஆகும். 7 ஆயிரத்து 960 தபால் வாக்குகளில், பிரகாஷ் 3 ஆயிரத்து 490 வாக்குகள் பெற்றார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகம் 82 ஆயிரத்து 332 வாக்குகளும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமார் 77 ஆயிரத்து 319 வாக்குகள் பெற்றனர். 31 பேர் போட்டியிட்ட ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் நோட்டாவிற்கு 13 ஆயிரத்து 742 வாக்குகள் பதிவானது. இறுதியாக, மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா, கே.இ.பிரகாஷிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். இதில் திமுக மாநகரச் செயலாளர் சுப்பரமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.