தோழர் எம்.என்.காளியண்ணன் அவர்கள் பவானி தாலுகா கீழ்வாணி யில் 14.12.1925 அன்று நஞ்சப்பன், பெரு மாய் அம்மாள் தம்பதிக்கு இரண்டா வது மகனாகப் பிறந்தார். இவரின் மனைவி ஈரோடு லக்காபுரம் குமரா பாளையத்தைச் சார்ந்த பெருமாயம் மாள் ஆவார். அவரது குடும்பத் தொழில் கைத்தறி நெசவு. கைத்தறி தொழில் ஒருகாலத்தில் விவசா யத்திற்கு அடுத்த முக்கிய தொழில். ஆனால் எம்என்கே.காளியண்ணன் அவர்கள் இளமையிலேயே கம்யூ னிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டு பொதுவாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்ததால் அவர் குடும்பம் வறுமையில் வாடியது. வாட்டும் வறுமை ஒருபுறம், இடைவிடாத கட்சிப் பணி மறுபுறம், இரண்டிற்கும் ஈடு கொடுத்து பணியாற்றினார்.
இளைஞர்களின் வழிகாட்டி
குறிப்பாக, 1964 ல் இந்திய கம்யூ னிஸ்ட் இயக்கம் பிளவுபட்டபோது, ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டவர்கள் சிலரே. இதில் சுருட்டுத் தொழிலாளர் சங்கம் மட்டுமே மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் கள் தலைமை தாங்கி நடத்திய சங்கம். இதர தொழிற்சங்கங்கள் பெருங்கொண்ட எண்ணிக்கையி லான கட்சித் தோழர்கள், பெரும் தலை வர்கள் எல்லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தனர். இச்சூழலில் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி என்ற அமைப்பின் கிளையை கோவை கே.சி.கருணாகரன், திருப்பூர் காளியப் பன் ஆகியோர் வந்து துவக்கி வைத்த னர். ஈரோடு முழுமைக்கும் இதுதான் முதல் கிளை. இங்கு ஆர்வமுடன் வந்த இளைஞர்களை உடன் இருந்து வளர்த்தெடுத்து, வழிகாட்ட அனுப்பப் பட்டவர்கள்தான் தோழர்கள் எம்.என். காளியண்ணன் மற்றும் ஜோதிநாத் ஆகியோர்.
இவர்கள் அப்போது ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு உறுப்பினராக இருந்த வர்கள். இவர்களில் தோழர் எம்.என்.காளி யண்ணன், ஈரோட்டை மையமாக வைத்து செயல்பட துவங்கினார். அவர் தலைமைப் பொறுப்பை ஏற்று சுருட் டுத் தொழிலாளர்களின் கோரிக்கை களை வென்றெடுத்தார். இதைத் தொடர்ந்து ஓட்டல் தொழிலாளர்க ளுக்கான கோவை மாவட்ட சங்க கிளையை ஈரோட்டில் துவக்கினார். காலேஜ் ஹவுஸ், காமதேனு ஹோட் டல் போன்றவற்றில் நீண்ட போராட் டம் நடத்தி பாதிக்கப்பட்ட தொழிலா ளர்களுக்கு நஷ்டஈடும் பெற்றுக் கொடுத்தார். இதற்கிடையே, சோச லிஸ்ட் வாலிபர் முன்னணியின் கிளை கள் பரவலாக துவங்கி செயல்பட்டது. இதன்தொடர்ச்சியாக எம்.என்.காளி யண்ணன் வழிகாட்டுதலில் வாலிபர் சங்கத்தின் முதல் கிளை அந்தியூரில் உதயமானது.
விவசாயிகளின் அரசியல் ஆசான்
இதேபோல், ஆப்பக்கூடல் வட் டாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சி எம்.என்.காளியண்ணனின் விடாமுயற்சியில் ஏற்பட்டது எனில் அது மிகையல்ல, அவருடன் ஏ.கே.பாலசுப்ரமணியம் அவர்களின் பங்க ளிப்பும் மகத்தானது. இவர்கள் முயற்சி யில் தற்போது கட்சியின் முன்னணி நிர்வாகிகளாக உள்ள பல இளம் தோழர்கள் அன்றைய தினம் கட்சியை நோக்கி வந்தனர். குறிப்பாக, ஆப்பக் கூடல் பி.கே பவர்லூம் தொழிலாளர் களின் வழக்கை எம்.என்.காளியண் ணன் சென்னை உயர்நீதிமன்றம் வரை கொண்டு சென்று நடத்தினார். அந்த போராட்டத்தில் பங்கேற்ற பல தொழி லாளர்கள் இன்று கட்சியின் முன்னணி ஊழியர்களாக இருந்து வருகின்றனர். இதேபோல், கவுந்தப்பாடி பகுதியில் கட்சி வளர்ச்சிக்கு வித்திட்ட எம்.என். காளியண்ணன் அவர்கள், அப்பகுதி யைச் சேர்ந்த பல விவசாயிகளை அரசியல்மயப்படுத்தி விவசாயிகள் அமைப்பின் கீழ் ஒன்றுதிரட்டினார்.
சிறை வாழ்க்கை
முன்னதாக, 1962ல் இந்திய சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை யின் போது, இந்திய அரசு மார்க்சிஸ்ட் டுகளை பாதுகாப்பு கைதிகளாக சிறை படுத்தியது. அப்போது எம்.என்.காளி யண்ணன் அவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது. இதே போல், 1974 ல் நாடுதழுவிய ரயில்வே தொழிலாளர் போராட்டத்தின் போது ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கு சென்றபோதும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் விலை வாசி உயர்வுக்கு எதிராக திருப்பூரில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் பங்கேற்றதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு கோவை, ஈரோடு மாவட் டங்களில் கட்சியின் முன்னணி ஊழி யராக, விவசாய இயக்கம் மற்றும் தொழிற்சங்க இயக்கத்தின் தலைவ ராக, இளைஞர்களின் வழிகாட்டி யாக திகழ்ந்த தோழர் எம்.என்.காளி யண்ணன் கடந்த 17.01.1996 அன்று நம்மை விட்டு மறைந்தார். இந்தாண்டு அவரது 25 ஆவது ஆண்டு நினைவு தினம் ஆகும். இவரின் நினைவு நாளான இன்று நாட்டையே வகுப்பு வாத வன்முறை காடாக மாற்ற முயற்ச் சிக்கும் மத்திய அரசின் கொள்கைக ளுக்கு எதிராகவும், அதற்கு துணை போகும் அதிமுகவிற்கு எதிராகவும் மக்களை திரட்ட அயராது பாடுபடு வோம் என்று உறுதியேற்போம்.! எம்.என்.காளியண்ணன் போன் றோரின் தியாகத்தில் பட்டொளி வீசும் செங்கொடியை உயர்த்திப் பிடிப் போம்.!
-ஈரோடு கே.துரைராஜ், சிபிஎம் மாவட்ட செயற்குழு.