பரமக்குடி அருகே சக ஆசிரியை ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச தகவல்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் நாகாச்சி பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(52). இவர் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று பாட ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சக ஆசிரியை ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச தகவல்களை அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த ஆசிரியை சத்திரக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சத்திரக்குடி காவல் துணை ஆய்வாளர் நாகராஜன் விசாரணை நடத்தி, ஆசிரியர் சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது அவர் ஆசிரியைக்கு ஆபாச தகவல்களை அனுப்பி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து சந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.