districts

திருச்சி முக்கிய செய்திகள்

சிஐடியுவில் இணைந்த வியாபாரிகள்

பொன்னமராவதி, மார்ச் 5 - பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் முன்பாக பூஜை பொருட்கள், விளையாட்டு பொருட்கள் வியாபாரம் செய்யும் வியாபாரி கள் ஒன்று சேர்ந்து புதிய கிளை அமைத்து சிஐடியுவில் இணைந்தனர். அனைத்து போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் ரத்தினவேல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொன்னமராவதி ஒன்றிய பொறுப்பாளர் குமார் ஆகியோர் பங்கேற்ற புதிய கிளை அமைப்பு கூட்டத்தில், தலைவராக முருகேசன், துணை தலைவராக ராஜமாணிக்கம், செய லாளராக வேலுச்சாமி, துணைச் செயலாளராக சோமசுந்த ரம், பொருளாளராக சித்ராதேவி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.


பொன்னமராவதி, பாபநாசத்தில் மேயர், துணைமேயர் தேர்வு

பொன்னமராவதி, மார்ச் 5 - பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் பதவிக்கு 10  ஆவது வார்டு திமுக கவுன்சிலர் சுந்தரி அழகப்பன் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக ஏழாவது  வார்டு திமுக கவுன்சிலர் வெங்கடேஷ் தேர்வு செய்யப்பட்டார். பொன்னமராவதி பேரூராட்சியில் முதன்முதலாக தலைவர்  பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. மேலும் மொத்தமுள்ள 15  வார்டுகளில் 9 வார்டுகளில் பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது. பாபநாசம் பாபநாசம் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த  பூங்குழலி கபிலன் போட்டியின்றி தேர்வானார். இவருக்கு பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திக்கேயன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் பின்னர் பேரூ ராட்சி துணைத் தலைவருக்கு மறைமுகத் தேர்தல் நடை பெற்றது. இதில் கட்சி அறிவித்த திமுக வேட்பாளரான ஜாபரை  எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபதி ராஜா போட்டி யிட்டார். எட்டு வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபதிராஜா வெற்றி பெற்றார். திமுக-வைச் சேர்ந்த ஜாபர் 6  வாக்குகள் பெற்றார். ஒரு வாக்கு செல்லாத வாக்கானது. இதே போன்று அய்யம்பேட்டை பேரூராட்சித் தலைவராக திமுக வைச் சேர்ந்த புனிதவதி, துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த அழகேசன் வெற்றிப் பெற்றனர்.


கீரங்குடி - குன்னம் கிராம  சாலை மேம்படுத்தப்படுமா?

சீர்காழி, மார்ச் 5 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கீரங்குடி  கிராமத்திலிருந்து குன்னம் கிராமத்திற்கு செல்லும் 3 கி. மீட்டர் தூர கிராம சாலை 10 வருடங்களுக்கு முன்பு புதிதாக  அமைக்கப்பட்டது. இந்த சாலையால் குன்னம், சிதம்பரநாத புரம், மாதிரவேளூர், கீரங்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த  விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன டைந்து வருகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை எளிதில் வயல்களில் இருந்து வீட்டுக்கு எடுத்து வரவும், துரிதமாக  விற்பனை செய்யும் வகையிலும் இந்த கிராம சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு விவசாயிகள் எளிதில்  சென்று சாகுபடி செய்து வருகின்றனர். உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று வயல் களில் பயன்படுத்துவதற்கும் இந்த சாலை முக்கிய பங்கு வகிக்கிறது.  இந்த சாலை தற்போது வரை மண் சாலையாகவே உள்ளது. இதனை தார்ச் சாலையாக மாற்ற எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இச்சாலையை தார்ச் சாலையாக  மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக கீரங்குடி கிராமத்திலிருந்து குன்னம்  செல்லும் கிராம சாலையை மேம்படுத்தி தார்ச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஆக்கிரமிப்பாளர்கள் மீது  நடவடிக்கை எடுக்க கோரிக்கை 

பொன்னமராவதி, மார்ச் 5 - நீதிமன்ற உத்தரவை மீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களை  மீட்டு, ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை  விடுத்துள்ளது. பொன்னமராவதி ஒன்றியம் உடையாம்பட்டியில் சிபிஎம்  கிளை கூட்டம் கணேசன் தலைமையில் நடைபெற்றது. சிபிஎம்  ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன் சிறப்புரையாற்றினர். ஆத்திக் காடு புறம்போக்கு சர்வே எண் 245 /2 இடத்தை நீதிமன்ற  உத்தரவை மீறி ஆக்கிரமிப்பு செய்துள்ள நபரை உடனடி யாக வெளியேற்ற வேண்டும். மங்கனூர் வேளா ஊரணி  மயான சாலையை சீரமைக்க வேண்டும். உடையான்பட்டியில் பேருந்து நிழற்குடை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும். மரவாமதுரை ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குளறுபடிகளை உடனே சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய குழு  உறுப்பினர் பி.ராமசாமி, கிளைச் செயலாளர் உ.அர்ச்சுனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.