அரியலூர், செப்.13 - அரியலூர் மாவட் டம் திருமானூர் கிராம பொதுமக்கள் காலை நேரங்களில் குளிப்பதற்கு கொள்ளிடம் ஆற்றை பெரும்பாலும் பயன் படுத்தி வருகின்றனர். அதேபோன்று செவ்வாயன்று காலை அப்பகுதி சிறுவர்கள் சிலர், ஆற்றில் இறங்கி குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப் போது ஆற்றின் கரையோரத்தில் கற்சிலை களான சாமி சிலைகள் இருப்பதைக் கண்டு கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ள னர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம மக்கள், அய்யனார் வீரன், கருப்பு சாமி, செல்லியம்மன், பச்சையம்மன் போன்ற சிலைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சிய டைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சாமி சிலைகளுக்கு சந்தனம் இட்டு, பூக்கள் வைத்து வழிபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கொள்ளிடம் ஆற்றில் இருந்த 9 கற்சிலைகளையும் மீட்டு அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இச்சிலைகள் அப்பகு திக்கு வந்ததற்கான காரணம் குறித்து திருமா னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர்.